Published:Updated:

``தன் இயலாமையை மறைக்க மத, இன உணர்வுகளைத் தூண்டிவிடும் வேலையை பாஜக சிறப்பாகச் செய்கிறது!" - சோனியா

சோனியா காந்தி

`ஜனநாயகத்துக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து கேட்பவர்கள் மீது சி.பி.ஐ உள்ளிட்ட அதிகார அமைப்புகளை மத்திய அரசு ஏவிவிடுகிறது.' - சோனியா காந்தி.

``தன் இயலாமையை மறைக்க மத, இன உணர்வுகளைத் தூண்டிவிடும் வேலையை பாஜக சிறப்பாகச் செய்கிறது!" - சோனியா

`ஜனநாயகத்துக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து கேட்பவர்கள் மீது சி.பி.ஐ உள்ளிட்ட அதிகார அமைப்புகளை மத்திய அரசு ஏவிவிடுகிறது.' - சோனியா காந்தி.

Published:Updated:
சோனியா காந்தி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைக்கவும், அதிருப்தியில் இருக்கும் முக்கியத் தலைவர்களைச் சமாதானப்படுத்தவும்... எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவும், புதிய ஆலோசனைகளைப் பற்றி முடிவெடுக்கவும் நிர்வாகிகளுடன் கட்சி மேலிடம் ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

முதல் நாளான இன்று கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி, ``நாட்டின் பன்முகத்தன்மைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோனியா காந்தி
சோனியா காந்தி

ஜனநாயகத்துக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து கேட்பவர்கள் மீது சி.பி.ஐ உள்ளிட்ட அதிகார அமைப்புகளை ஏவிவிட்டு... காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்கிறது மத்திய அரசு. தேசத் தலைவர்களை கொலை செய்தவர்கள் இன்று கொண்டாடப்படுகிறார்கள். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட இயலாமைகளை மறைக்க மத உணர்வுகளை, இன உணர்வுகளைத் தூண்டிவிடும் வேலையைச் சிறப்பாக பா.ஜ.க அரசு செய்கிறது" எனக் காட்டமாகப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பாகவும் விவாதிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism