Published:Updated:

``என் திறமையை அங்கீகரித்த ஒரே கட்சி பா.ஜ.க-தான்” - சொல்கிறார் அலிஷா அப்துல்லா

அண்ணாமலையுடன் அலிஷா அப்துல்லா

``ரேஸ் மட்டும் இல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் பங்கெடுப்பதற்குப் பெண்கள் முன் வருவதற்கான வேலைகளை செய்யப்போகிறேன்” - அலிஷா அப்துலா

``என் திறமையை அங்கீகரித்த ஒரே கட்சி பா.ஜ.க-தான்” - சொல்கிறார் அலிஷா அப்துல்லா

``ரேஸ் மட்டும் இல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் பங்கெடுப்பதற்குப் பெண்கள் முன் வருவதற்கான வேலைகளை செய்யப்போகிறேன்” - அலிஷா அப்துலா

Published:Updated:
அண்ணாமலையுடன் அலிஷா அப்துல்லா

மத்தியில் மட்டுமல்லாமல், மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட பாஜக தனி கவனம் செலுத்தி பல்வேறு முயற்சிகளையும் எடுத்துவருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்திவரும் பாஜக, பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் சினிமா, சின்னதிரை நடிகர்கள், விளையாட்டுத்துறையினர் என அனைவரையும் தன் பக்கம் அரவணைத்துவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல பைக் மற்றும் கார் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா பாஜக-வில் இணைந்திருக்கிறார். பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் தேசிய மகளிர் கூடைப்பந்து குழு முன்னாள் கேப்டன் பத்மஸ்ரீ அனிதா பால் துரையைப் பாராட்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை கார் வழங்கிய நிகழ்வில் அலிஷா அப்துல்லாவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்

அலிஷா அப்துல்லா
அலிஷா அப்துல்லா

``கார் - பைக் ரேஸ், நடிகை என இயங்கிவந்த நீங்கள், அரசியல் பக்கம் வந்திருக்கிறீர்களே?”

``பெரிய அரசியல்வாதியாக வர வேண்டும், பெரிய பெரிய கட்சிகளையெல்லாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை. நான் நிறைய பெண்களுக்கு ரேஸில் பயிற்சி அளிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை கார், பைக் ரேஸில் பெண்கள் பெரிய அளவில் இல்லை. சர்வதேச அளவில் வருவதற்கு அவர்களை உருவாக்க வேண்டும். என் திறமையை அங்கீகரித்த ஒரே கட்சி பா.ஜ.க-தான். பல பெண்கள் விளையாட்டுக்கு வருவதற்கான முன்னெடுப்புகளை எடுத்துவரும் கட்சியும் பா.ஜ.க-தான். எனவே அதில் இணைந்து நிறைய பெண்களுக்கு விளையாட்டுத்துறையில் வருவதற்கு ஓர் உந்துதலாக இருப்பேன்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``மற்ற கட்சிகளைவிட்டு பா.ஜ.க-வில் இணைய என்ன காரணம்?”

``தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளைவிட இன்றைய தேதியில் பா.ஜ.க-வின் வளர்ச்சி கண்முன் தெரிகிறது. பா.ஜ.க-தான் இன்று சரியான கட்சியாக இருக்கிறது. ஏற்கெனவே சொன்னதுபோல் இன்று எல்லா தரப்புப் பெண்களும் விளையாட்டுக்கு வருவதற்கு பா.ஜ.க முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, பாஜக குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமர் பிரசாத் ரெட்டி எனக்கு அளித்த மரியாதை, அங்கீகாரம் இங்கு பா.ஜ.க-வில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கிறது. என்னைத் தேர்வுசெய்யும்போதுகூட சாதி, மதம் பற்றி ஏதும் கேட்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை.”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அலிஷா அப்துல்லா
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அலிஷா அப்துல்லா

“அரசியலில் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கப்போகிறது?”

“பா.ஜ.க-வில் இருந்துகொண்டு பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன். ரேஸ் மட்டும் இல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் பங்கெடுப்பதற்குப் பெண்கள் முன்வருதற்கான வேலைகளைச் செய்யப்போகிறேன். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்காகக் களத்தில் போய் வேலை செய்யப்போகிறேன். அதற்கான முன்னெடுப்பாக பா.ஜ.க இப்போது அறிவித்திருக்கும் கபடிப் போட்டியில் என் பங்கும் இருக்கும்.”