Published:Updated:

"முதல்வரின் முதலெழுத்து `ஸ'வுக்கு மாற்று கண்டுபிடிக்க தமிழக அரசு குழு அமைக்கவேண்டும்" - அண்ணாமலை

அண்ணாமலை

`ஸ'வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்." - அண்ணாமலை

"முதல்வரின் முதலெழுத்து `ஸ'வுக்கு மாற்று கண்டுபிடிக்க தமிழக அரசு குழு அமைக்கவேண்டும்" - அண்ணாமலை

`ஸ'வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

"ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழியை இடையீட்டு மொழியாகப் பயன்படுத்தலாம்" என்கிற அமித்ஷாவின் பரிந்துரைக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த நேரத்தில் ஓவியர் சந்தோஷ் நாராயணன் `தமிழணங்கு' என்கிற பெயரில் வரைந்த தமிழ்த்தாய் ஓவியத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்தது வைரலானது. சமீபத்தில் இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட காணொலியை முதல்வர் ஸ்டாலின் தமிழணங்கு ஓவியத்துடன் பகிர்ந்திருந்தார்.

தமிழணங்கு ஓவியத்தில் கருப்பு நிற பெண் `ழ' எழுத்து பதித்த கோலை கையில் பற்றியவாறு நடனமிடும் தோற்றம் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் அண்ணாமலை தமிழன்னை எனப் பகிர்ந்திருக்கும் ஓவியத்தில் பின்னணியில் தமிழ் எழுத்துக்களோடு 'ஸ' என்கிற சம்ஸ்கிருத எழுத்தும் இடம்பெற்றிருந்தது.

"எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே" என்று கேப்ஷனோடு தமிழ்த்தாயின் ஓவியம் ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தமிழணங்கு ஓவியம்
தமிழணங்கு ஓவியம்
அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த்தாய் ஓவியம்
அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த்தாய் ஓவியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும்போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டிவிட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்'என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்." என விமர்சித்து இருந்தார்.

தங்கம் தென்னரசுவுக்கு பதிலளித்த அண்ணாமலை, "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது! `ஸ' வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்." எனப் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism