மதுரை சௌராஷ்டிரா மகளிர் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்துகொண்டார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷயங்கள் பல வைரலாகிவருகின்றன. "அதிக நேரம் பேசினால் நானே தூங்கிவிடுவேன்” என்று ஆரம்பித்த அண்ணாமலை, ``இளைஞர்களின் மனதை சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்துள்ளன.

மாணவர்கள் மூலமாக சமூக ஊடகங்கள் சம்பாதிக்கின்றன. தமிழகத்தில் 74 சதவிகித மக்கள் சமூக ஊடகங்களில் மூழ்கியுள்ளனர். சமூக ஊடகங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவது மிக முக்கியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநம் நாடு எப்போதும் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கும் நாடு. இந்தியப் பெண்கள் உலகத்துக்கே முன்மாதிரியாக இருப்பதற்கு அதுதான் காரணம். நம் பண்பாடு உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. சில நாடுகளில் வாக்களிக்கக்கூட மகளிரை அனுமதிப்பதில்லை.
ஆனால், இந்தியாவில் மகளிருக்கான மரியாதை பண்டைய காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்துவருகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழ்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். இங்கே யார் வேண்டுமானாலும் வாழ்வின் உயரத்தை எட்டலாம். சில விஷயங்களைச் சரியாக செய்யும்போதுதான் முன்னேற முடியும். நம் நாடு உலகத்துக்கே விஷ்வ குருவாக மாறிவருகிறது. வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்ல மாணவர்கள் விரும்பவில்லை.
நம் நாட்டிலயே படித்து, நம் நாட்டிலயே தொழில் தொடங்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் பெண்கள்தான் அதிக அளவில் கடன் வாங்கித் தொழில் தொடங்கியிருகிறார்கள். இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கும். தமிழகத்தில் முத்ரா திட்டத்தால் 72 சதவிகிதப் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மகாபாரதத்தில் ஒவ்வொருவரின் வாழ்கையும் நேரில் பார்ப்பதுபோல் இருக்கும். பிரச்னையும், அதைத் தீர்க்க முடிவெடுப்பது போன்றவை மகாபாரதத்தில் உள்ளன. மகாபாரதத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும்.
ஆயிரம் புத்தகங்களை படிப்பதைவிட ஒரு புத்தகத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும். மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

வாட்ஸ்அப்பில் கிசுகிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடிபோல் பெரிய பதவிகளில் அமர வேண்டுமென்றால் அதிகமாகப் புத்தகங்கள் வாசித்து வரலாறு, அரசியலைத் தெரிந்துகொள்ள வேண்டும். நான் இதுவரை 20,000 புத்தகங்களைப் படித்திருக்குறேன். அவற்றில் சில புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் இரண்டு புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் முதல் உள்ளூர் வரை அனைத்துப் புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
சென்னை புத்தகத் திருவிழாவில் இளைஞர்களைப் பார்க்க முடியவில்லை. இது வருத்தமளிக்கிறது. சாதனைப் பெண்கள் எல்லாரும் ரிஸ்க் எடுத்தவர்கள்தான். கிரண் பேடிக்கு காவல்துறையின் உயர் பதவி முதலில் வழங்கப்பட்டது.
காவல்துறையில் ஆண்கள் எடுக்கும் அனைத்து ரிஸ்குகளையும் கிரண் பேடி எடுத்தார். அதனால்தான் அவர் நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகக் கொண்டாடப்படுகிறார். வாழ்க்கையில் முன்னேற இளைஞர்கள் ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும்.

இன்று ஐ.பி.எஸ்-ஸில் 47 சதவிகிதத்துக்கு மேல் பெண்கள் உள்ளனர். மதிப்பெண் என்பது நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதைத் தீர்மானிக்கக் கூடாது. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
எனக்கு சிறு வயதில் வாய் பேசவே வராது. தடுமாறித்தான் பேசுவேன். ஆசிரியர் புனிதா என்பவர்தான் என்னைக் கண்டுபிடித்து பள்ளியில் வழிபாட்டு நேரத்தில் செய்தித்தாளை மாணவர்கள் முன் படிக்கவைத்து என்னைச் சரிசெய்தார். பொறியியல் படித்து முடித்ததும் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கோச்சிங் சென்ட்டரில் வகுப்பு எடுத்து ஐ.ஐ.எம்-மில் சேர்ந்து ரிஸ்க் எடுத்தேன். ஏன் பிறந்தோம் என்பதைக் கண்டுபிடிக்க வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரி கற்றுக் கொடுக்காத வாழ்க்கையை கோச்சிங் கிளாஸில் கற்றுக்கொண்டேன். வாழ்கையை வாழக் கற்றுக்கொண்ட பிறகுதான், குடியரசு மாளிகை தேநீரும் இனித்தது. அதேபோல் திருநெல்வேலியில் கட்சி நிர்வாகி அன்போடு அளிக்கும் எளிய உணவும் இனித்தது.

என்னோடு பொறியியல் கல்லூரியில் படித்த நண்பருக்கு சினிமாமீது மிகுந்த ஆசை இருந்தது. அவருக்கு 10-க்கும் மேற்பட்ட அரியர் இருந்தது. ஆனால் சினிமாவை எந்தக் கட்டத்திலும் அவர் விடவேயில்லை. 20 ஆண்டுகளுக்குப் பின் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை எடுத்து பெரியசாமி வெற்றியடைந்தார். அடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்க உள்ளார். அவரின் உழைப்புதான் இந்த அளவுக்கு அவரை உயர்த்தியது.
அரசியல்வாதியாக மாறி இரண்டு வருடங்களுக்குப் பிறகு அரசியல் இல்லாமல் வாழ்க்கை குறித்து இங்கு பேசியது திருப்தியளிக்கிறது" என்று கலகலவென்று பேசினார்.