Published:Updated:

`முதல்வர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க தலைமை விரைவில் அறிவிக்கும்!’ - எல்.முருகன்

மதுரை விமான நிலையத்தில் எல்.முருகன்
மதுரை விமான நிலையத்தில் எல்.முருகன்

`தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க தலைமை விரைவில் அறிவிக்கும்’ - பா.ஜ.க தமிழகத் தலைவர் எல்.முருகன்.

``தி.மு.க தலைவர் ஸ்டாலின் அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் பரிசீலனை செய்து, எந்த நடவடிக்கையும் எடுப்பார்" என்று பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், முதல்வர் வேட்பாளர் பற்றி மீண்டும் பேசியது அ.தி.மு.க கூட்டணிக்குள் சர்ச்சையை நீடிக்கவைத்திருக்கிறது.

எல்.முருகன்
எல்.முருகன்

இன்று மதுரை வந்திருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தமிழக பா.ஜ.க சார்பில் 1,000 இடங்களில் விவசாயிகளைச் சந்தித்து, வேளாண் திருத்தச் சட்டங்களிலுள்ள பலன்களை விளக்கிவருகிறோம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.2,000 இரண்டாம்கட்டமாக வங்கிகள் மூலம் வழங்கப்படவிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க-வின் போராட்டம் வெற்றி அடையவில்லை. தி.மு.க ஆட்சியில்தான் 42-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் எல்.முருகன்
மதுரை விமான நிலையத்தில் எல்.முருகன்

கடந்த 2016-ம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்குச் சாதகமாகும் வகையில் விளைபொருள்களை எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்கு வேறுவிதமாகப் பேசிவருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை கொதிக்கவைத்த சீட் பேரம்..! - முருகன் கொளுத்திய `முதல்வர் வேட்பாளர்' சர்ச்சை

எஸ்றா சற்குணம் இறைவனுக்குத் தொண்டாற்றாமல், தி.மு.க கூட்டங்களில் மோடியை ஒருமையில் பேசிவருவதைக் கண்டிக்கிறோம். அவர்மீது காவல்துறையினர் உரிய நடைவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பா.ஜ.க சார்பில் போராட்டங்கள் நடத்துவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க தலைமை விரைவில் அறிவிக்கும்.

மதுரை விமான நிலையத்தில் எல்.முருகன்
மதுரை விமான நிலையத்தில் எல்.முருகன்

பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரூ.2,500 வழங்குவதை வரவேற்கிறேன். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் பரிசீலனை செய்து எந்த நடவடிக்கையும் எடுப்பார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு