Published:Updated:

போதைப்பொருளுடன் சிக்கிய பா.ஜ.க பிரபலம்; பரபரக்கும் மேற்கு வங்கம் - யார் இந்த பமீலா கோஸ்வாமி?

மேற்கு வங்க பா.ஜ.க இளைஞர் அமைப்பின் பொதுச்செயலாளர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜ.க-வின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) மாநிலச் செயலாளர் பமீலா கோஸ்வாமி போதை மருந்து வைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

பமீலா கோஸ்வாமி
பமீலா கோஸ்வாமி
Twitter

யார் இந்த பமீலா கோஸ்வாமி?

2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்த பமீலா, விமான பணிப்பெண்ணாகவும், வங்காள தொலைக்காட்சி நடிகையாகவும் பணியாற்றியவர். கட்சிக்குள் நுழைந்த சில நாள்களிலேயே யுவ மோர்ச்சா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பதவி பமீலாவுக்குக் கிடைத்தது. அதிலிருந்து கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் அளவுக்கு வளர்ச்சி பெற்றார் பமீலா. மேற்கு வங்க பா.ஜ.க-வின் பிரபலமான முகமாகவே அவர் வலம்வந்தார்.

என்ன நடந்தது?

காவல்துறை வட்டாரத் தகவல்படி, பமீலா மற்றும் அவரின் நண்பரும், யுவமோர்ச்சாவைச் சேர்ந்தவருமான பிரபீர்குமார் டே ஆகியோர் குறிப்பிட்ட கஃபேவுக்கு அடிக்கடி சென்றதாகவும், காரில் இருந்தபடிய சில பொருள்களை, பைக்கில் வந்த மர்ம நபருடன் கைமாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை நோட்டமிட்டு பல நாள்களாகப் பின்தொடர்ந்த காவல்துறை, நேற்று மாலை அதே கஃபே வாசலில் பமீலாவின் காரை மடக்கி சோதனையிட்டிருக்கிறது.

முகுல் ராயுடன் பமீலா கோஸ்வாமி
முகுல் ராயுடன் பமீலா கோஸ்வாமி
Twitter

அதில், கார் சீட்டின் அடியிலிருந்த பர்ஸில் 100 கிராம் அளவுக்கு கோகெய்ன் எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பமீலா, அவரின் தனிக் காவலர், பிரபீர்குமார் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது, `என்னைச் சிக்கவைக்க சதி நடந்திருக்கிறது’ என்று பமீலா கோஸ்வாமி போலீஸ் வாகனத்தின் உள்ளே இருந்தபடியே கூச்சலிட்டிருக்கிறார்.

பிரதமர் நிகழ்ச்சியில் பமீலா கோஸ்வாமி
பிரதமர் நிகழ்ச்சியில் பமீலா கோஸ்வாமி
Twitter

அவர் கைதுசெய்யப்பட்டது குறித்துப் பேசிய மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா,``இந்த முழு நிகழ்வும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரித்துவருகிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. காவல்துறை இன்னும் மாநில அரசின் கீழ் இருக்கிறது. எனவே, எதுவும் சாத்தியமாகும். அவரது வாகனம் மற்றும் அவரது பைக்குள் போதை மருந்து பாக்கெட்டுகள் வேண்டுமென்றே வைக்கப்பட்டதா என்பதை நாம் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும் ” என்றார்.

இந்த வழக்கில் அனைத்து உண்மைகளையும் கட்சி சேகரித்துவருவதாக மேற்கு வங்காள நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான லாக்கெட் சாட்டர்ஜி கூறினார். ``எனக்கு மேற்கு வங்கக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை.

பமீலா கோஸ்வாமி
பமீலா கோஸ்வாமி

கடந்த காலங்களில், பா.ஜ.க தலைவர்களை ஆயுதங்கள், போதைப்பொருள் வைத்திருந்ததாகப் பொய்யான வழக்குகளில் சிக்கவைக்க முயன்றிருக்கிறது. உண்மைகளை முழுமையாக ஆராய வேண்டிய தேவை இருக்கிறட்து. ஒருவரைக் கைதுசெய்வதால் மட்டும் அந்த நபர் குற்றவாளி என்று அர்த்தமல்ல” என்று லாக்கெட் கூறினார்.

மேற்கு வங்கம் : திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த மனைவி! - அதிர்ச்சியில் பா.ஜ.க எம்.பி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரிமா பட்டாச்சார்யா, ``மேற்கு வங்காளத்தில் நடக்கும் நிகழ்வுகள், பா.ஜ.க-வின் உண்மையான முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன” என்று கூறியிருக்கிறார்.

பமீலா கோஸ்வாமியின் இந்தக் கைது, மேற்கு வங்க அரசியல் களத்தில் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு