Published:Updated:

``கீழடி... டூ மினிட்ஸ் நூடுல்ஸ் அல்ல!" - வானதி சிறப்புப் பேட்டி

வானதி
வானதி

அகழ்வாய்வுப் பணியின் இடையே பருவ மழைக் காலம் வருகிறது. தோண்டப்பட்ட குழிகளுக்குள் மழைத்தண்ணீர் இறங்கினால், பாதிப்பு யாருக்கு... நமக்குத்தானே!

பா.ஜ.க பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் அசராமல் பதிலளித்துவந்த தமிழிசை இப்போது தெலங்கானா ஆளுநராகிவிட்ட சூழலில், தமிழக பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனை சந்தித்துப் பேசினேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க http://bit.ly/360hovQ

"இடைத்தேர்தலில், பி.ஜே.பி கூட்டணியை உறுதி செய்வதில், அ.தி.மு.க-விடம் ஒருவிதத் தயக்கம் நிலவியது ஏன்?''

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் கிடையாது. பா.ஜ.க-வுக்கு மாநிலத் தலைவர் இல்லாத சூழலில், யாரை அணுகுவது என்ற தயக்கம் அ.தி.மு.க-வினருக்கு ஒருவேளை இருந்திருக்கலாம். மற்றபடி எங்கள் கூட்டணி இப்போதும் சிறப்பாகத் தொடர்கிறது.''

"தமிழர் வாழ்வின் தொன்மையைச் சொல்லுகிற, கீழடி ஆய்வுப் பணியில் மத்திய அரசு ஆர்வம் காட்டாதது ஏன்?''

கட்சிக்காரர்கள் எல்லோருக்குமே நான் அக்காள்தான். இதற்கு முன்பாக, தமிழிசையை, பெரிய அக்காள் என்பார்கள்; என்னைச் சின்ன அக்காள் என்பார்கள்.

"கீழடியைப் பொறுத்தவரை, மத்தியக் கலாசாரத் துறை அமைச்சரே நேரடியாக வந்து இடத்தைப் பார்வையிட்டு, ஒவ்வொரு கட்டமாக எப்படியெல்லாம் நிதி ஒதுக்கவேண்டுமோ அப்படியெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால், இடையில் அதிகாரிகள் பணி மாறுதல்கள் வந்தன. அடுத்ததாக, கீழடியில் கிடைக்கக்கூடிய சிறுசிறு கற்கள்கூட முக்கியத்துவம் வாய்ந்தவை.

அப்படியிருக்கும்போது அகழ்வாய்வுப் பணியின் இடையே பருவ மழைக் காலம் வருகிறது. தோண்டப்பட்ட குழிகளுக்குள் மழைத்தண்ணீர் இறங்கினால், பாதிப்பு யாருக்கு... நமக்குத்தானே! அதனால்தான் பணிகளை அப்படியே நிறுத்திவிட்டுப் பாதுகாப்பாக மூடி வைக்கிறார்கள். கீழடி ஆராய்ச்சி என்பது 'டூ மினிட்ஸ் நூடுல்ஸ்' அல்ல. சமீபத்தில்கூட, 'மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசிய ஒரு வாரத்தில், கீழடி ஆய்வு மற்றும் அருங்காட்சியகப் பணிகளுக்கான நிதி உதவி வந்து சேர்ந்துவிட்டதாக...' தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.''

" 'பொதுமொழியாக இந்தி இருக்க வேண்டும்' என்று பேசிய அமித்ஷாதானே, தி.மு.க-வின் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு, 'நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது' என்று பல்டியடித்தார்?"

"பல்டியடித்தார் என்ற வார்த்தை தவறானது. 'நான் மன்னிப்பு கேட்கிறேன்', 'நான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்', 'நான் தவறாகச் சொல்லிவிட்டேன்' என்றெல்லாம் அமித்ஷா பேசியிருந்தால்தான், பல்டியடித்தார் என்று சொல்ல வேண்டும். ஆனால், 'நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது' என்ற விளக்கத்தைத்தான் கொடுக்கிறார்."

"தமிழகத்தின் அக்காள் தமிழிசை, தெலங்கானா ஆளுநராகிவிட்டார். தமிழக பா.ஜ.க-வின் அடுத்த அக்காள் வானதி சீனிவாசன்தான் என்கிறார்களே..?''

"கட்சிக்காரர்கள் எல்லோருக்குமே நான் அக்காள்தான். இதற்கு முன்பாக, தமிழிசையை, பெரிய அக்காள் என்பார்கள்; என்னைச் சின்ன அக்காள் என்பார்கள். மற்றபடி தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பு என்பதெல்லாம் கட்சித் தலைமை முடிவு செய்கிற விஷயம். யாருக்கு, எப்போது, என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத்தான் தெரியும். என் பணி என்பது தமிழகத்தில் கட்சியை வளர்ப்பது மட்டும்தான். வேறு எந்த விஷயத்திலும் என் கவனம் இல்லை.''

வானதி
வானதி

> "பகவத் கீதையை மட்டும் அண்ணா பல்கலைக் கழகத்தில், தத்துவப் பாடமாக அறிமுகப்படுத்தியது இந்துத்துவத்தைப் பரப்பும் நோக்கம்தானே?''

> "தமிழ் சிறந்த மொழி, மூத்த மொழி என்றெல்லாம் ஐ.நா-விலேயே பேசுகிற பிரதமர் மோடி, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கிறார்?''

> ''செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கான மத்திய அரசு நிதி ஒதுக்கப்படவில்லை, கீழடித் தொல்லியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவில்லை என மத்திய பா.ஜ.க அரசு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்கின்றனவே?''

> "அஞ்சலகம், ரயில்வே என மத்திய அரசுத் துறை சார்ந்த பணித் தேர்வுகளில் எல்லாம் திட்டமிட்டுத் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிற இந்தச் சூழலில், தமிழ்மொழி மீதான ஆர்வம் மக்களுக்கு எப்படி ஏற்படும்?''

> "370-ஐ நீக்கினால், காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்றீர்கள். ஆனால், 370 நீக்கப்பட்டபிறகு இப்போது அங்கே ஊடகத்தினர் செல்லக்கூட அனுமதி இல்லையே, என்னதான் நடக்கிறது?''

- இந்தக் கேள்விகளுக்கு வானதி சீனிவாசன் அளித்த பதில்களை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > சின்ன அக்காள் ஆகிய நான்... https://www.vikatan.com/government-and-politics/politics/vanathi-srinivasan-talks-about-the-current-status-of-tamil-nadu-bjp

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு