Published:Updated:

``மோடிக்கு மாற்று யாரும் இல்லை என்ற வாதத்தில் உடன்பாடு இல்லை!” - பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் மோடிக்கு மாற்றாக வேறு யாரும் இல்லை என்ற பாஜகவினரின் வாதத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. தெரிவித்துள்ளார்.

``மோடிக்கு மாற்று யாரும் இல்லை என்ற வாதத்தில் உடன்பாடு இல்லை!” - பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் மோடிக்கு மாற்றாக வேறு யாரும் இல்லை என்ற பாஜகவினரின் வாதத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி

ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி தனது கட்சியை பாஜகவோடு இணைத்து, தானும் அதில் ஐக்கியமாகிவிட்டார். அவரை ராஜ்யசபை எம்.பி.யாக்கியிருக்கிறது பாஜக. ஆனால் அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி அரசுக்கு எதிராகவும், நிதியமைச்சருக்கு எதிராகவும் கருத்துக்களை முன் வைத்து வருகிறார். தற்போதும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், ``கடந்த 8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட தவறிவிட்டார். நாட்டின் வளர்ச்சி 2016-ம் ஆண்டில் இருந்து சரிந்து கொண்டே செல்கிறது. தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. சீனாவைப்பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் பிரதமர். நாடு இப்பிரச்னையில் இருந்து மீள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எப்படி என்று அவருக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

சமூக வலைத்தளத்தில் ஒருவர், `இப்பிரச்னைக்கு தீர்வு காண நீங்கள் ஆலோசனை சொல்லுங்கள்’ என்று கேட்டதற்கு, ``பழங்கால ரிஷிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண அத்துறையில் போதிய அறிவு இருப்பவர்களிடம் பணிகளை பிரித்து கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், ``பிரதமர் மோடிக்கு மாற்றாக வேறு யாரும் இல்லை என்று அவர்ஆதரவாளர்கள் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே மற்றொரு நெட்டிசன், சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை ஏற்க மறுத்து, ``பிரதமர் நாற்காலியில் வேறு ஒருவர் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட மோசமாக இருந்திருக்கும். ஒரு வேளை பாகிஸ்தானியர்கள், இலங்கையர்கள் போல் அழுதால் புதிய பிரதமர் வந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியத்துவத்தை உணருவீர்கள்” என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ``அதைத்தான் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் சொன்னார்கள், பிரிட்டன் விட்டுச்சென்றால் இந்தியா சிதைந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத்து அவருக்கு மீண்டும் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுக்குமா என்ற சந்தேகத்தை ஏற்பத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism