Election bannerElection banner
Published:Updated:

தமிழ் மக்களோடு நெருங்க ரூட் போடும் பா.ஜ.க... `வேறொரு' ரூட்டில் எல்.முருகன்!

முருகன் - நயினார் நாகேந்திரன்
முருகன் - நயினார் நாகேந்திரன்

சென்னையிலிருந்து நெல்லைக்குச் சென்ற பா.ஜ.க தலைவர் முருகன், நயினார் நாகேந்திரனைச் சமாதானப் படுத்தியுள்ளார். மத்திய அரசு நிறுவனங்களில் போர்டு மெம்பர் பதவி தருவதாகக்கூடப் பேசப்பட்டதாம்

நமது கையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலின் அறிக்கை இருப்பதைப் பார்த்த கழுகார், "தமிழ், தமிழர் என பா.ஜ.க உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்திருப்பதைப் கவனித்தீரா!" என்றபடி செய்திக்குள் நுழைந்தார்.

"பிரதமர் மோடி திருக்குறள் புகழ் பாடுகிறார். `டெல்லியிலுள்ள முக்கிய சாலைக்கு மாமன்னன் ராஜராஜ சோழனின் பெயர் சூட்ட வேண்டும்' என பா.ஜ.க எம்.பி தருண் விஜய் கூறுகிறார். இப்போது அப்துல் கலாமை ஏகத்துக்கும் புகழ்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ், தமிழர் என உயர்த்திப் பிடித்து மக்களோடு நெருங்க ரூட் போடுகிறது பா.ஜ.க" என்றார் கழுகார்.

"ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேறொரு ரூட்டில் திருநெல்வேலி வரைக்கும் பயணித்தது ஏனோ?" என்று கண்சிமிட்டினோம்.

"நயினார் நாகேந்திரன் விவகாரத்தைக் கூறுகிறீரா... தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்டவர்களில் அவரும் ஒருவர். டெல்லி வரை முட்டிப் பார்த்தும் பொறுப்பைக் கைப்பற்ற முடியவில்லை. நயினாரின் மனநிலையைப் புரிந்துகொண்ட நெல்லை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், அவரை தி.மு.க-வுக்கு இழுக்கத் திட்டமிட்டனர். இதற்கு தி.மு.க தலைமையும் சம்மதித்ததாம்.

இத்தகவல் கசிந்ததால், அவசரமாக சென்னையிலிருந்து நெல்லைக்குச் சென்ற பா.ஜ.க தலைவர் முருகன், நயினார் நாகேந்திரனைச் சமாதானப் படுத்தியுள்ளார். மத்திய அரசு நிறுவனங்களில் போர்டு மெம்பர் பதவி தருவதாகக்கூடப் பேசப்பட்டதாம். ஆனால் நயினார் பிடி கொடுக்கவில்லை என்கிறார்கள்."

"ம்ம்... அ.தி.மு.க நிர்வாகிகள் மாற்ற அறிவிப்புக்கு ரியாக்‌ஷன் எப்படி?"

"விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிக்க சி.வி.சண்முகம் கடைசிவரை அனுமதிக்கவில்லை. திருநெல்வேலியைப் பிரித்து மனோஜ் பாண்டியனுக்குக் கொடுக்க தங்கமணி, வேலுமணி விரும்பவில்லை.

எம்.ஜி.ஆர் காலத்து நபரான நடிகை லதா கொள்கை பரப்பு அணியில் இடம் கேட்டுள்ளார். அவரைப் புறக்கணித்துவிட்டனர். 'மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை' என மகளிரணி கண் சிவக்கிறது.

இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள். சென்னையைப் பிரிப்பதற்கு இப்போதுள்ள அ.தி.மு.க மா.செ-க்கள் எல்லோரும் ஒரு தனியார் ஹோட்டலில் ஒன்றுகூடி விவாதித்துள்ளனர். ஆளுக்கு இரண்டு தொகுதிகளை எடுத்துக்கொண்டு, மீதமுள்ளதை தங்கள் ஆதரவாளர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு தனியாக வருமாம்."

> "தி.மு.க முகாம் வேகமெடுத்து விட்டதே... கட்சிக்குள் போர்க்குரலும் எழுகிறதே?"

> "மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் உதயநிதியின் கை ஓங்கிவருவது தி.மு.க சீனியர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளதன் பின்னணி..."

- கழுகார் திரட்டிய தகவல்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க...https://bit.ly/3jRRr8r > வேகமெடுக்கும் உதயநிதி! - அப்செட்டில் தி.மு.க சீனியர்கள் https://bit.ly/3jRRr8r

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு