Published:Updated:

'எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி' - பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க - பா.ஜ.க இடையே உறவு நீடிக்காது. எனவே, சுயநலத்துடன் செயல்பட்டாக வேண்டும். தேவை ஏற்பட்டால் தனித்து களமிறங்கவும் வேண்டும்' என்று சீரியஸாகப் பேசுகின்றனராம்

''என்ன கழுகாரே... கிரீன்வேஸ் சாலையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறீரே..?'' - நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை தட்டில்வைத்து நீட்டியவாறு கழுகாரை வரவேற்றோம்...

''நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அவரின் படத்துக்கு மரியாதை செய்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதேசமயம், 'நாவலரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். நாவலருக்கு முழு உருவ வெண்கலச் சிலை சென்னையில் அமைக்கப்படும்' என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், அவரின் பிறந்தநாளை தி.மு.க பாணியில் கொண்டாடாததில் அ.தி.மு.க-வின் சீனியர் புள்ளிகளுக்கு வருத்தம். 'கருணாநிதியுடன் நெடுஞ்செழியன் இருந்த காலத்தைவிட அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் அவர் இருந்ததுதான் அதிகம். அ.தி.மு.க ஆட்சி நடக்கும் இந்த நேரத்தில், நாவலருக்கு தி.மு.க-வைப்போல மரியாதை செய்யவில்லை' என்பது அவர்களின் வருத்தமாம்.''

நாவலர் நெடுஞ்செழியனின் படத்துக்கு தி.மு.க-வினர் மரியாதை
நாவலர் நெடுஞ்செழியனின் படத்துக்கு தி.மு.க-வினர் மரியாதை

கழுகாரிடம் ரவா கேசரியை நீட்டியபடி, "ஏதோ அரைத்த மாவையே அரைப்பதாக கமலாலயத்தில் பேச்சு ஓடுகிறதே..?" என்றோம்.

''தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வரும் முன்னரே, ஆட்சிக்குச் சிக்கல் வருவதை விரும்புகிறதாம் பி.ஜே.பி. காபந்து அரசாகச் செயல்பட்டால், ஆளுநரைவைத்து அடுத்த ஆண்டில் தமிழகத்தில் ஒரு ரவுண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாம். மத்திய அரசின் திட்டங்களை மாநிலம் முழுவதும் காவிப் படைகளைக்கொண்டு விளம்பரப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.

'அ.தி.மு.க - பா.ஜ.க இடையே உறவு நீடிக்காது. எனவே, சுயநலத்துடன் செயல்பட்டாக வேண்டும். தேவை ஏற்பட்டால் தனித்து களமிறங்கவும் வேண்டும்' என்று சீரியஸாகப் பேசுகின்றனராம்.''

"சரிதான்... ரஜினியின் அரசியல் வருகையைப் பற்றி கராத்தே தியாகராஜன் பேசியிருக்கிறாரே..?''

''அவர் அதைப் பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்துதான் நவம்பரில் ரஜினி கட்சி தொடங்கப்போவதாக கராத்தே கூறியிருக்கிறார். மாநாடு நடத்தி, கட்சி தொடங்குவதைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது ரஜினியின் திட்டமாம். ஆனால், இப்போதுள்ள கொரோனா சூழலில் மாநாட்டை நடத்த முடியாத நிலை.

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்

இதனிடையே அரசியல் வியூகம் வகுக்கும் அணி ஒன்று ரஜினியைச் சந்தித்துப் பேசியுள்ளது. 'மாநாட்டை இணைய வழியாக நடத்தலாம். இப்போது உங்களுக்கு உள்ள செல்வாக்கு, சமூக வலைதளங்களின் தாக்கம் ஆகியவற்றால் உங்கள் பேச்சை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு செய்துவிடலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினி வழக்கம்போல அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம்" என்ற கழுகார், "வாரிசு அரசியலை எதிர்த்துப் போரிட்ட ஒருவர். அதே வாரிசு அரசியலைக் கையிலெடுத்திருப்பது தெரியுமா உமக்கு?" என்றார்.

"யாரைச் சொல்கிறீர்?" என்றோம் ஆர்வம் கலையாமல்.

- கழுகார் விவரித்த முழு தகவல்களையும் ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > மிஸ்டர் கழுகு: ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல்... துரை வைகோவுக்கு சிவப்புக் கம்பளம்! https://bit.ly/2OzH5vw

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு