Published:Updated:

மத்திய அமைச்சருடன் கைகுலுக்கும் ‘தேடப்படும் குற்றவாளி?’ - புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்

 புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்

அவர் தேடப்படும் குற்றவாளிதான். குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரிக்க அழைப்பதுதான் 41-A பிரிவே தவிர, அவர் குற்றவாளி இல்லை என்பதல்ல.

மத்திய அமைச்சருடன் கைகுலுக்கும் ‘தேடப்படும் குற்றவாளி?’ - புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்

அவர் தேடப்படும் குற்றவாளிதான். குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரிக்க அழைப்பதுதான் 41-A பிரிவே தவிர, அவர் குற்றவாளி இல்லை என்பதல்ல.

Published:Updated:
 புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்

மோசடி வழக்கு ஒன்றில் காவல்துறையால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவருடன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கைகுலுக்கும் புகைப்படம் புதுச்சேரி அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்திவருகிறது!

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் குற்றவாளிகளைச் சந்திப்பது, அவர்களை நாடாளுமன்ற வளாகத்துக்கு சகஜமாக அழைத்துச் சென்று பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் கைகுலுக்கவைப்பது என அதிரிபுதிரி அரசியல் செய்துவருகின்றனர் புதுச்சேரி பா.ஜ.க-வினர்.

மத்திய அமைச்சருடன் கைகுலுக்கும் ‘தேடப்படும் குற்றவாளி?’ - புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்

புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவகுமார் படுகொலை உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய தாதா எழிலரசியை, கடந்த 2020-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, தேடிக்கொண்டிருந்தது காரைக்கால் டி.ஆர்.பட்டினம் காவல் நிலையம். அதேநேரம் 2021, ஜனவரி மாதம் அவரை நேரில் சந்தித்து, பா.ஜ.க-வில் இணைத்தார் அந்தக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன்.

இதேபோல போலி ஏ.டி.எம் அட்டைகள் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த வழக்கிலும், பெண்களை அடைத்துவைத்து பாலியல் தொழில் செய்த வழக்கிலும் கைதுசெய்யப்பட்டவர் சந்துரு ஜி. இவரை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான கல்யாணசுந்தரமும், ரிச்சர்டு ஜான்குமாரும் 2021, டிசம்பர் மாதம் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்திக்க வைத்ததோடு, அந்த போட்டோவை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு புளகாங்கிதமடைந்தனர். இந்த வரிசையில், தற்போது மோசடி வழக்கு ஒன்றில், ‘தேடப்பட்டுவரும் குற்றவாளி’ ஒருவரையே மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் கைகுலுக்க வைத்து, புதுச்சேரி அரசியலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களில் ஒருவரும், சபாநாயகருமான செல்வம்.

மத்திய அமைச்சருடன் கைகுலுக்கும் ‘தேடப்படும் குற்றவாளி?’ - புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்

சில நாள்களுக்கு முன்புதான், 2 கோடி ரூபாய் மோசடி வழக்கு ஒன்றில், புதுச்சேரி பா.ஜ.க பொருளாதாரப் பிரிவின் இணை அமைப்பாளரான ரமேஷைத் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அறிவித்தது ரெட்டியார்பாளையம் காவல் நிலையம். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி (19-7-2022) ரமேஷை டெல்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியோடு நேருக்கு நேர் சந்திக்கவைத்து அதிரவைத்திருக்கிறார் புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.

புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிவரும் இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் செல்வத்திடம் கேட்டபோது, “ரமேஷுக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பதால்தான், 41-A-ன்படி போலீஸார் அவரை விசாரித்து அனுப்பிவிட்டார்கள். அவர் குற்றவாளி என்றால் அப்போதே கைதுசெய்திருக்கலாமே...” என்றார் லாஜிக்கலாக.

மத்திய அமைச்சருடன் கைகுலுக்கும் ‘தேடப்படும் குற்றவாளி?’ - புதுச்சேரி பா.ஜ.க-வின் பூகம்ப அரசியல்

இது குறித்து வடக்குப் பிரிவு காவல்துறை எஸ்.பி பக்தவத்சலத்திடம் கேட்டபோது, “ரமேஷை விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என ஒற்றைவரியில் முடித்துக்கொண்டார்.

ஆனால், “அவர் தேடப்படும் குற்றவாளிதான். குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரிக்க அழைப்பதுதான் 41-A பிரிவே தவிர, அவர் குற்றவாளி இல்லை என்பதல்ல. கைது செய்யப்படுவோம் என்பதால்தான் ரமேஷ் முன்ஜாமீன் தாக்கல் செய்திருக்கிறார். காவல்துறையும் அந்த அவகாசத்தை அவருக்கு வழங்குகிறது” என்கிறார் புகார்தாரரின் வழக்கறிஞரான தமிழரசன்.

நடத்துங்க... நடத்துங்க..!