Published:Updated:

``தமிழகத்தில் தற்போது ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை!" - திருப்பதி நாராயணன் பேட்டி

திருப்பதி நாராயணன்
திருப்பதி நாராயணன்

தமிழகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் திருப்பங்கள், பா.ஜ.க-வின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்துப் பேச, தமிழக பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணனை அவரின் இல்லத்தில் சந்தித்தோம்...

"வரப்போகும் தேர்தல் எப்படியிருக்கும், பா.ஜ.க-வின் கூட்டணி யாரோடு?"

"தமிழகத்தின் வரலாற்றில் இந்தத் தேர்தல், திருப்புமுனை மிக்கதாக இருக்கப்போகிறது. கடந்த ஐம்பது வருடங்களாக, கருணாநிதியின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை ஒட்டித்தான் தேர்தல் இருக்கும். கருணாநிதிக்கு எதிராக வலிமை மிக்க தலைவர்களாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் இருந்துவந்தார்கள்.

தற்போது தமிழகத்தில், ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. நல்ல ஆளுமைகளைப் பார்த்து வாக்களித்த மக்கள், இந்த முறை நல்ல நிர்வாகம்கொண்ட கட்சி எது என்பதைப் பார்த்து வாக்களிக்கப்போகிறார்கள். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, தேர்தல் கூட்டணி மற்றும் முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்துத் தேர்தல் நேரத்தில்தான் முடிவுசெய்ய முடியும்."

"ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தரப்பில் ஒட்டப்பட்ட 'போஸ்டர்', சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே?"

"ஒரு வினைக்கு எதிர்வினை என்பது தவறு. அந்த வினையும் தவறுதான். `ஹத்ராஸ் சம்பவத்துக்கு பா.ஜ.க-தான் காரணம்' என்று சொல்ல, பதிலுக்கு `அதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள்தான் காரணம்' என்று போஸ்டர் அடிக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுமே தவறுதான்!"

திருப்பதி நாராயணன்
திருப்பதி நாராயணன்

" `தலித் சமூகத்திலிருந்து ஒருவரைத் தலைவராக்கியிருக்கிறோம்' என்று நீங்கள் கூறியதற்குப் பல விமர்சனங்கள் எழுந்தனவே..?"

" 'தலித் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை' என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தாரே... அது தவறான விஷயமில்லையா? இந்தியாவிலேயே அதிக அளவு பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பதவியிலிருப்பது பா.ஜ.க-வில்தான். பட்டியலினத்தவர், பா.ஜ.க-வில் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார். இவ்வளவு சித்தாந்தம் பேசும் கம்யூனிஸ்ட்டுகளில் எத்தனை முதல்வர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்..? நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள்தானே... கேட்டால், `நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம்; பிராமணர்களை அல்ல' என்பார்கள்."

"பா.ஜ.க-வின் கூட்டணியில் ரஜினி இடம்பெறுவாரா?"

"சொல்ல முடியாது. தேர்தல் நெருங்கும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரஜினி கட்சி ஆரம்பித்தால், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை கண்டிப்பாக மாறும்."

> "பா.ஜ.க கொண்டு வந்த 'வேளாண் சட்ட மசோதா'வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றனவே..."

> "மத்திய அரசின் 'ஒரே தேசம் ஒரே ரேஷன்' திட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றனவே..?"

> " `சி.பி.ஐ-யும் நீதிமன்றங்களும் மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன' என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே..?"

> "தமிழக பா.ஜ.க தலைவர் முருகனின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

> "பல்வேறு குற்றப் பின்னணிகொண்ட நபர்கள் பா.ஜ.க-வில் இணைந்துவருகிறார்களே?"

> "பெரியார் பிறந்தநாளுக்கு எல்.முருகன் வாழ்த்து சொன்னதில் உங்களுக்கு என்ன முரண்பாடு?"

> "அப்படியானால், பெரியார் பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறியது அரசியல் உத்தியா?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2SFbTNJ > "தி.மு.க-வே ஈ.வெ.ரா-வைத் திட்டித்தான் ஆட்சியைப் பிடித்தது!" - வெடிக்கும் திருப்பதி நாராயணன் https://bit.ly/2SFbTNJ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு