Published:Updated:

அண்ணாமலை பேச்சு:``அன்று `கோ பேக் மோடி’ என்றவர்கள் இன்று அந்தத் திட்டத்தைப் பாராட்டிப் பேசுகிறார்கள்"

அண்ணாமலை
அண்ணாமலை

``குறைகளை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சி என்றால் அது திமுக-தான். தமிழகத்தில் மாற்று அரசியலையும், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை-யும் பாஜக-வால்தான் தர முடியும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக-வின் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். முன்னதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகளான பால் சிவயாதவ், நெல்லையாளன் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று ஆசிபெற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இளைஞர்களின் படை நம் பக்கம் திரும்பியிருக்கிறது. வரும் உள்ளாட்சித் தேர்தல், 2024-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் ஆகியவற்றில் பாஜக வெற்றிபெற, அடிப்படையில் கட்சியைக் கட்டமைக்கும் வேலை தேவை.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
அண்ணாமலை காட்டம்:  ``விநாயகரை வைத்து அரசியல் செய்தால் அவர் திமுக அரசுக்கு  முடிவுரை எழுதுவார்"

அதைத்தான் இப்போது செய்துவருகிறோம். கொரோனா முதல் அலையில் திமுக-வினர் யாரும் வெளியே வரவில்லை. இரண்டாம் அலையில்தான் கூலிங்கிளாஸ், கிளவுஸ் போட்டுக்கொண்டு மக்களைச் சந்தித்தனர். குறைகளை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சி என்றால் அது திமுக-தான். அவர்களின் ஆட்சி 100 நாள்களைத் தாண்டியுள்ளது.

அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைதான் தெரிகிறது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் மட்டுமே அவர்களால் நிறைவேற்ற முடியும். இரண்டையும் ரத்து செய்ய முடியாது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். 2020-ல் நடந்த நீட் தேர்வில் தமிழகத்தில்தான் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 100 மாணவர்களிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

தமிழகத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக-வினர், `கோ பேக் மோடி’ என்று கோஷம் எழுப்பினார்கள். கறுப்புச்சட்டை அணிந்துகொண்டு, கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டனர். ஆனால், இன்று அவர்களின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தத் திட்டம் தமிழகத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 2,000 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது எனச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ’கோ பேக் மோடி’ என்று சொன்னவர்கள், இன்று அந்தத் திட்டத்தைப் பாராட்டிப் பேசுகிறார்கள். அதேபோல, ஆட்சி அமைப்பதற்கு முன்னதாக, கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்துக்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்துகொள்வதாகத் திமுக-வினர் விமர்சித்தனர்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

ஆனால், தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``தமிழகத்துக்குத் தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என மீடியாக்களிடம் கூறியுள்ளார். எதிர்கட்சியாக இருந்தபோது மத்திய அரசை விமர்சித்த திமுககூட தற்போது மத்திய அரசைப் புரிந்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் மாற்று அரசியலையும், லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியையும் பாஜக-வால்தான் தர முடியும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு