Published:Updated:

கோவை: `கொங்கு டார்கெட்; டிசம்பரில் திருப்புமுனை!' - பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்

பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் கோவை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாள் நிகழ்ச்சி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆகியவற்றுக்காக பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கோவைக்கு வந்திருந்தார். இதையடுத்து, சித்தாப்புதூரிலுள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில்வைத்து முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பிரணாப் முகர்ஜியின் அரசியல் அனுபவம், பொருளாதாரச் சிந்தனைகள் இந்த நாட்டுக்கு சிறப்பாக இருந்தன. அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்தார். அவரது மரணம் வேதனைக்குரியது.

பா.ஜ.க
பா.ஜ.க

பா.ஜ.க-வின் சக்தி கேந்திரப் பொறுப்பாளர்கள் மூலமாக பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. பா.ஜ.க-வை நோக்கிப் பலதரப்பட்ட மக்களும், தி.மு.க சீனியர் நிர்வாகிகளும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். பிரதமர் மோடி ஏற்படுத்திய உத்வேகம் அதற்கு முக்கியக் காரணம்.

`டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழகத்தில் வளரவில்லை!’ பா.ஜ.க-வைச் சீண்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ

மத்திய அரசின் திட்டங்களில், நாட்டிலேயே அதிகம் பலனடைந்த மாநிலம் தமிழகம்தான். வரும் சட்டமன்றத் தேர்தலில், வெற்றிபெற்று எங்களின் கணிசமான உறுப்பினர்களை சட்டசபைக்குள் உட்காரவைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் பிரதான திட்டம். எங்களது முழு கவனமும் தேர்தலை நோக்கித்தான் இருக்கிறது. அதேநேரத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஏற்கெனவே இருக்கும் கூட்டணி தொடர்கிறது. அது பலமாகத்தான் இருக்கிறது.

பா.ஜ.க முருகன்
பா.ஜ.க முருகன்

முக்கியமாக, அதில் எங்களது கட்சியின் பலம் அதிகரித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் நாங்கள் சர்வே நடத்தினோம். அதன்படி, `60 தொகுதிகளில் தனித்து நின்றால்கூட நாங்கள் வெற்றி பெறுவோம்’ என ரிசல்ட் வந்திருக்கிறது. நாங்கள் அதிக வலுவாக இருக்கும் பகுதியாகக் கருதுவது கொங்கு மண்டலம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் வகையில் இருக்கக் கூடாது. சகோதரர் ரஜினி ஒரு தேசியவாதி, ஆன்மிகவாதி. அவர் அரசியல் கட்சித் தொடங்கினால், அதை நாங்கள் வரவேற்போம். மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் எங்களுடன் பேசிவருகின்றனர். இன்னும் நிறைய முக்கிய நிர்வாகிகள் எங்கள் கட்சியில் சேர வாய்ப்பிருக்கிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்” என்றார். அப்போது, பா.ஜ.க மூத்த தலைவர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

பா.ஜ.க
பா.ஜ.க

ஏற்கெனவே, கடந்த வாரம் அண்ணாமலை கோவை வந்திருந்தபோது, ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பா.ஜ.க-வினர் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பாக, அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர்மீது காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இன்றை நிகழ்ச்சியிலும் பா.ஜ.க-வினர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக இருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு