Published:Updated:

மதுரை:`நடமாடவிட மாட்டார்கள் என்றுதான் சொன்னேன்; வன்முறையைத் தூண்டவில்லை!’- எல்.முருகன்

எல்.முருகன்
எல்.முருகன்

``தமிழகத் தாயமார்களை கொச்சைப்படுத்தியவர்களை, தமிழ் சகோதரிகளே நடமாடவிட மாட்டார்கள் என்றுதான் தெரிவித்திருந்தோம். நாங்கள் வன்முறையைத் தூண்டவில்லை" - எல்.முருகன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை எதிர்த்துப் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் முட்டுக்காடு அருகே போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சூழலில், காளையார்கோவிலில் நடைபெறும் மருது சகோதரர்கள் குருபூஜையில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

எல்.முருகன்
எல்.முருகன்

அவர் கூறுகையில்,``தமிழகத்தில் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியவர்களைக் கண்டித்து, அறவழியில் போராட்டம் நடத்தச் சென்ற பா.ஜ.க நிர்வாகிகளை தமிழக அரசு கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது.

`திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை!’ - குஷ்பு

50 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு இந்த ஆண்டு வாய்ப்புகள் குறைவு என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் கூறி இருந்ததை, உச்ச நீதிமன்றமும் கூறியிருக்கிறது. கமிட்டியின் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு நிறைவேற்ற பா.ஜ.க சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும். இந்த விஷயத்தில் மத்திய அரசைக் குறைசொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எல்.முருகன்
எல்.முருகன்

கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்களையும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசுபவர்களையும் பாதுகாக்கும் வகையில் தி.மு.க செயல்பட்டுவருகிறது. அவர்களின் ஆதரவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அவர்களைப் பாதுகாத்தேவருகிறார் மு.க.ஸ்டாலின்’’ என்றார்.

அவரிடம், ரஜினியுடன் கூட்டணி உண்டா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு,``ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. ஆனாலும், கூட்டணி அமைவது குறித்து இறுதி முடிவு ரஜினியைப் பொறுத்துதான்’’ என்று முருகன் பதிலளித்தார்.

எல்.முருகன்
எல்.முருகன்

`பா.ஜ.க வன்முறையைத் தூண்டுகிறது என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?’ என்ற கேள்விக்கு, ``தமிழகத் தாயமார்களைக் கொச்சைப்படுத்தியவர்களை, தமிழ்ச் சகோதரிகளே நடமாடவிட மாட்டார்கள் என்றுதான் தெரிவித்திருந்தோம். நாங்கள் வன்முறையைத் தூண்டவில்லை" என்று அவர் பதிலளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு