Published:Updated:

``பாஜக-வில் பணமிருந்தால் பொறுப்பு உண்டு!" - திமுக-வில் இணைந்த மைதிலி வினோ காட்டம்

மைதிலி வினோ

பா.ஜ.க மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ, அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

``பாஜக-வில் பணமிருந்தால் பொறுப்பு உண்டு!" - திமுக-வில் இணைந்த மைதிலி வினோ காட்டம்

பா.ஜ.க மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ, அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Published:Updated:
மைதிலி வினோ

தமிழ்நாட்டில் தி.மு.க-வினர், பா.ஜ.க-வினரையும், பா.ஜ.க-வினர் தி.மு.க-வினரையும் தங்கள் கட்சிகளுக்கு இழுக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் மதுரை மாநகர மாவட்டத் தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பா.ஜ.க-வில் இருந்து விலகினார். இவர் தி.மு.க-வில் விரைவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ, அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் இவர் தி.மு.க-வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாலும் மைதிலி வினோவை கட்சியிலிருந்து நீக்குவதாக கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிக்கை வெளியிட்டார்.

அறிக்கை
அறிக்கை

இந்த அறிக்கைக்கு, ``பாரதிய ஜனதா கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜக-வின் மாவட்டத் தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்தேன். பாஜக-வில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள் அறியாததே. ஏனென்றால் தாங்கள் பாஜக-வுக்கு புதியவர். தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின் செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குச் செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பதுதான் நிதர்சனம்... நன்றி! இப்படிக்கு... மைதிலி வினோ" என்று முகநூலில் பதில் அளித்துள்ளார் மைதிலி வினோ.

``பாஜக-வில் பணமிருந்தால் பொறுப்பு உண்டு!" - திமுக-வில் இணைந்த மைதிலி வினோ காட்டம்

இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த மைதிலி வினோவிடம் பேசினோம். ``பா.ஜ.க-விலிருந்து என்னை நீக்குவதற்கு முன்பே நான் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து, திமுக-வில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. பாஜக-வினர் என்னிடம் எங்களது ஒப்புதல் இல்லாமல் எதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தீர்கள் என்று கேட்டனர். இது எனது தனிப்பட்ட விஷயம், நான் கட்சியில் இணைய சென்றிருக்கலாம் அல்லது எதற்காக வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். ஆனால், அறிக்கையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படி எந்த செயலில் ஈடுபட்டேன்? என்பதுதான் என் கேள்வி. நான் கட்சி காசை திருடினேனா? கட்சி கொள்கைகளிலிருந்து மாறி செயல்பட்டேனா? அல்லது கட்சிக்கு துரோகம் செய்தேனா? எதுவும் இல்லாமல் அவர் அறிக்கையில் அப்படி கூறி இருப்பது தவறு. அமைச்சரை சந்தித்ததற்கு இப்படி கடுமையான வார்த்தைகள் பயன்படுத்த அவசியம் இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உத்தமபாலாஜி எத்தனை வருடங்களாக அரசியலில் இருக்கிறார்? நான் எத்தனை வருடமாக அரசியலில் இருக்கிறேன்? எத்தனை போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளேன்? என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு வந்த வலி, அடுத்து எல்லா மகளிருக்கும் கண்டிப்பாக வரும். இத்தனை வருடங்களாக பாடுபட்டவர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லை.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதியவர்கள் வேகமாக வேலை செய்வார்கள் என்று யோசிக்கிறார். அவரது யோசனை தவறில்லை. அவர் கட்சியை வளர்ப்பதற்கு அந்த கோணத்தில் இருந்து யோசிக்கிறார். அதே சமயம், பழைய ஆட்களுக்குதான், எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்து இருக்கின்றனர். அதை புதிய நிர்வாகிகள் எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? இவர்கள் பழைய நிர்வாகிகளை ஒதுக்குகின்றனர். இதனால் பல பழைய நிர்வாகிகள் கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் யாருக்கும் மற்ற கட்சிகளில் சேரும் தைரியம் கிடையாது. கொள்கைக்காக பாஜக-விலேயே நீடிக்க விரும்புகின்றனர்.

மைதிலி வினோ
மைதிலி வினோ

பணம் இருந்தால் எந்த பதவியை வேண்டுமானால் வாங்கலாம் என்பது தற்போது பாஜக-வின் கொள்கை ஆகிவிட்டது. 'பணி செய்து பழி தீர்ப்போம்' என்பது போய் 'பணம் இருந்தால் பொறுப்பு உண்டு' என்ற கொள்கைக்கு பாஜக மாறிவிட்டது. எப்பொழுதும் பாஜக-வில் பொறுப்பு இல்லை என்றால், தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ், வி.ஹி.ப ஆகிய இடங்களுக்கு தான் செல்வோம். நான் மாறுபட்டு திமுக-வுக்கு சென்றதுதான் அவர்களுக்கு அதிருப்தி" என்று கூறினார்.

அவரிடம் திமுக-வை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை கேட்டபோது, ``வரும் காலங்களில் திமுக-வை தவிர்த்து வேறு எந்த கட்சியும் இருக்கப்போவதில்லை. அதிமுக மூன்றாக பிரிந்து நிற்கிறது. அவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை வளர்ப்பதற்கான சாத்தியம் குறைவு. முகநூலில் பலபேர் என்னிடம், பாஜக-வில் இத்தனை வருடம் இருந்துகொண்டு திமுக-வை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை கேட்டனர். ஒரு காலத்தில் திமுக பாஜக கூட்டணியில்தான் இருந்தது. அப்போது அது சரியாக இருந்ததா? எது சரி, எது தவறு என்று கூறமுடியாது. அடுத்த தேர்தலில்கூட திமுக பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாம். பாஜக ஜெயிக்க ஆசைப்பட்டால் நிச்சயம் மறுக்கமாட்டார்கள். மறுபடியும் தாமரை ஜெயிக்க நினைத்தால் தாமரை சூரியனுடன் சேரும். ஆனால் தனித்தே வரும் 15 வருடங்கள் சூரியன் மட்டும்தான் ஜெயிக்கும். மேலும் முதல்வர் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். அவற்றையெல்லாம் மக்களுக்கு கொண்டு செல்ல திமுக-வில் சேர்ந்திருக்கிறேன்" என்று கூறினார்.