Published:Updated:

``அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?" - இராம ஸ்ரீனிவாசன் விளக்கம்

இராம ஸ்ரீனிவாசன் - அண்ணாமலை

`விரைவில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படுவார்' என்ற தகவல் சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்பட்டுவருகிறது. இந்த நிலையில்தான், அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

``அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?" - இராம ஸ்ரீனிவாசன் விளக்கம்

`விரைவில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படுவார்' என்ற தகவல் சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்பட்டுவருகிறது. இந்த நிலையில்தான், அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
இராம ஸ்ரீனிவாசன் - அண்ணாமலை

"அண்ணாமலை பா.ஜ.க-வின் தலைவர் மட்டுமல்ல, தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர்" என்று அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

பரபரப்பாக அரசியல் செய்துவந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் நிலையில், `விரைவில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படுவார்' என்ற தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்பட்டுவருகிறது. இந்த நிலையில்தான், அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ``அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இது போன்ற தகவலை பா.ஜ.க-விலுள்ள சிலரே பரப்பிவருகிறார்கள். காரணம், திராவிடக் கட்சியினர்போல அதிரடியாக அவர் அரசியல் செய்வதுதான். தி.மு.க அரசில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ச்சியாக அவர் வெளியிடும் கருத்துகள் மூலம் தொடர்ந்து மீடியா லைம்லைட்டில் இருந்துவருகிறார். அது மட்டுமின்றி அவர் அறிக்கைவிட்டாலே அந்தப் பிரச்னை குறித்து அரசும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சி பா.ஜ.க என்பது போன்ற தோற்றத்தைக் கொண்டுவந்தார். ஆனாலும், அவருடைய நடவடிக்கை எதிர்க்கட்சியினரைவிட சொந்தக் கட்சியினருக்குப் பிடிக்கவில்லை என்பதுதான் இது போன்ற செய்திகள் பரவக் காரணம்.

ஜே.பி.நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சி
ஜே.பி.நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சி

சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி முடித்து தேசியத் தலைவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது தமிழக பா.ஜ.க. இதை சீனியர்கள் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அதிலும் காரைக்குடியில் நாடாளுமன்றத் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் 1,500 பேரை ஒருங்கிணைத்து நடத்திய கூட்டம், அவர்கள் வைத்திருந்த டேட்டாவைப் பார்த்து நட்டாவே அசந்துபோயிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழக பா.ஜ.க தயாராக இருப்பதை காரைக்குடிக் கூட்டத்தின் மூலம் மேலிடம் அறிந்துகொண்டிருக்கிறது.

இவ்வளவுக்கும் தி.மு.க-விலிருந்து வந்த சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை வைத்தே அண்ணாமலை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நட்டாவிடம் சிறப்பு அனுமதி பெற்று, பா.ஜ.க நிகழ்ச்சிகளிலயே முதன்முறையாகக் கலந்துகொண்டவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இது சீனியர்கள் சிலருக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது இப்படியே போனால் கட்சியின் அடிப்படைக் கொள்கையை அழித்துவிடுவார். அதனால், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் மறைமுகமாகப் பரப்பிவருகின்றனர்.

அதேநேரம், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துவருவதால், தி.மு.க ஆதரவாளர்களும் அண்ணாமலை மாற்றப்படப் போகிறார் என்ற செய்தியைப் பரப்பிவருகிறார்கள்" என்றனர்.

இராம ஸ்ரீனிவாசன்-அண்ணாமலை
இராம ஸ்ரீனிவாசன்-அண்ணாமலை

இந்த நிலையில்தான், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தற்போது சில ஆன்லைன் ஊடகங்களில் ஒரு விஷமச் செய்தி வலம் வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார் என்றும், புதிய தலைவர் பொறுப்பேற்பார் என்றும் சில விஷமிகள் செய்தி வெளியிட்டுவருகிறார்கள்.

இது போன்ற செய்திகள் தீய நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் வீச்சாகவும், வீரியமாகவும், விரைவாகவும் வளர்ந்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இது போன்ற சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

லட்சக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் மனதில் குழப்பத்தை விளைவிக்கவும், பாரதிய ஜனதா கட்சியை பலவீனப்படுத்துவதற்குமான முயற்சி இது.

இராம ஸ்ரீனிவாசன்
இராம ஸ்ரீனிவாசன்

காங்கிரஸ் கட்சி போன்று தலைவர்களை நியமிக்கும் வழக்கம் பா.ஜ.க-வில் கிடையாது. தி.மு.க போன்று ஒரு குடும்பத்துக்குள் மட்டுமே தலைவரைத் தேடுகிற தகுதியற்ற கட்சியும் கிடையாது.

அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைக் குவிக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணாமலை பா.ஜ.க-வின் தலைவர் மட்டுமல்ல, தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர் என்பதை எதிரிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.