Published:Updated:

``ஏ.ஆர்.ரஹ்மான் ஆசைதான் எங்கள் ஆசையும்... நானும் திராவிடன்தான்!" - அண்ணாமலை

அண்ணாமலை

`இங்கு தமிழை வைத்து வியாபாரம் மட்டும் செய்து கொண்டிருக்கின்றனர். குவாலிட்டி அடிப்படையில் தமிழ் மொழிதான் நம்பர் ஓன். குவான்டிட்டி அடிப்படையில் இந்தி இருக்கிறது.' - அண்ணாமலை

``ஏ.ஆர்.ரஹ்மான் ஆசைதான் எங்கள் ஆசையும்... நானும் திராவிடன்தான்!" - அண்ணாமலை

`இங்கு தமிழை வைத்து வியாபாரம் மட்டும் செய்து கொண்டிருக்கின்றனர். குவாலிட்டி அடிப்படையில் தமிழ் மொழிதான் நம்பர் ஓன். குவான்டிட்டி அடிப்படையில் இந்தி இருக்கிறது.' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தத் தமிழக பாஜ.க தலைவர் அண்ணாமலை, ``தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் தொடர்கிறது. கன்னியாகுமரி, கண்ணாட்டுவிளை பள்ளி மாணவி கொடுத்துள்ள புகார் அதற்கு மற்றொரு சான்று. மகாத்மா காந்தியே மதமாற்றம் பெரிய அபாயம் எனச் சொல்லியிக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விவகாரத்தை மாநில அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய மதமாற்றம் செய்யக் கூடாது. காது கேளாத அரசுக்கு இது எப்படி கேட்கும். இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை. இந்தி பேசுபவர்களின் சதவிகிதம் அதிகம் என்ற அடிப்படையில் அமித் ஷா சொல்லியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

20 ஆண்டுகாலம் இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவில் இணைப்பு மொழியாக தமிழைக் கொண்டு வந்துவிடலாம். ஏ.ஆர்.ரஹ்மான் ஆசைதான் எங்கள் ஆசையும். இங்கு தமிழை வைத்து வியாபாரம் மட்டும் செய்து கொண்டிருக்கின்றனர். குவாலிட்டி அடிப்படையில் தமிழ் மொழிதான் நம்பர் ஓன்.

ரஹ்மான் பகிர்ந்த தமிழன்னை ஓவியம்
ரஹ்மான் பகிர்ந்த தமிழன்னை ஓவியம்

குவான்டிட்டி அடிப்படையில் இந்தி இருக்கிறது. நடிகர் விஜய் பேசியது பிரபலமாகிறது. இந்தி தேவை என்றால் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கின்றோம். பீஸ்ட் ரிவ்யூ பார்த்தேன். நன்றாக இருப்பதாகச் சொல்கின்றனர். சினிமாவில் விஜய் நடிகராகப் பேசுகிறார். எங்கள் எதிரி திமுக மட்டும்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டமன்றத்தில், பா.ஜ.க-வினர் தேவையில்லாத விவகாரங்களை பேசுகின்றனர் என சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது. தேவையில்லாத வேலையை செய்வது முதல்வர்தான். ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசுகிறார். மத்தியில் 450 சீட்டுகளை பிடித்து, பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும். 2026 சட்டசபைத் தேர்தலில், தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ.க பிடிக்கும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை ஏற்கலாம் . ஆனால் திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது. திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் வேண்டும். நானும் திராவிடன்தான். தி.மு.க, அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்.” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism