Published:Updated:

``உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை..!" - அண்ணாமலை தாக்கு

அண்ணாமலை

`தமிழக அரசு செயற்கையாக மின் வெட்டை உருவாக்கி, அதன் மூலம் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து பணம் பார்க்க முயற்சிக்கிறது.' - அண்ணாமலை

``உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை..!" - அண்ணாமலை தாக்கு

`தமிழக அரசு செயற்கையாக மின் வெட்டை உருவாக்கி, அதன் மூலம் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து பணம் பார்க்க முயற்சிக்கிறது.' - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் கடந்த 2006 - 2011 தி.மு.க-வின் இருண்ட கால ஆட்சியை நினைவூட்டுகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

மின்வெட்டுக்கு முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் மத்திய அரசையே குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தியாவில் 777 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2.2 கோடி இருப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முக்கியமாக, மத்திய மின்துறை அமைச்சர் கூறிய தகவல் படி 30 நாள்களுக்கு தேவையான நிலக்கரி நம்மிடம் கையிருப்புள்ளது. தமிழகத்தில் மட்டும் எப்படி மின் வெட்டு பிரச்னை வருகிறது?போதிய நிலக்கரி இருந்தும், நிலக்கரி இல்லை என தி.மு.க அரசு பஞ்சப்பாட்டு பாடி வருகிறது.

மின்வெட்டு பிரச்னை
மின்வெட்டு பிரச்னை

தமிழக அரசு செயற்கையாக மின் வெட்டை உருவாக்கி, அதன் மூலம் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து பணம் பார்க்க முயற்சிக்கிறது. தமிழக மின் உற்பத்திக்கு, தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என செந்தில் பாலாஜி கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் யூனிட் 1, 2 ஆகியவற்றில் பி.ஆர்.ஜி நிறுவனத்தின் மோசமான வேலையால் செயல்திறன் குறைந்துள்ளது. மின்துறை அமைச்சருக்கு கமிசன் வருவதற்காக இவ்வாறு மோசமாக வேலை செய்து வருகின்றனர். தமிழக மின் உற்பத்திக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி போதுமானது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே மின்துறையை வைத்துள்ளனர். மின்துறை அழியும் நிலையில் உள்ளது. மின்துறை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மத்திய அரசையே குறை கூறிக்கொண்டிருந்தால், தமிழக அரசு எதற்கு... மக்கள் வரி பணம் எதற்கு? தமிழக அரசை, மத்திய அரசிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சென்னையில் ஜெயிலில் விக்னேஷ் உயிரிழக்கவில்லை என கூறிவிட்டு,

அண்ணாமலை
அண்ணாமலை

அவர் குடும்பத்திற்கு போலீஸார் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை, ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை மாலையில் பிணையில் விடுவிக்கின்றனர்.

இசைஞானி இளையராஜவுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும். அவரை இழிவுபடுத்துவது சரியல்ல. டி.ஜி.பி அமைதி காப்பது வேதனையளிக்கிறது. டி.ஜி.பி சம்பவ இடத்துக்கு சென்றிருக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதற்கு முதலில் மக்களுடன் நின்று சேவை செய்திருக்க வேண்டும். ஒருவேளை அவர் வர முயற்சித்தாலும், நடிகர் ரஜினி படத்தில் வருவது போல் கார் ஸ்டார்ட் ஆகாது.” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism