Published:Updated:

``உங்கள் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது!" - நிதிஷ் உடனான கூட்டணி குறித்து லாலுவை எச்சரித்த பாஜக

லாலுவுடன் நிதிஷ் குமார்

உங்கள் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதாக லாலு பிரசாத் யாதவிடம் பா.ஜ.க மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

``உங்கள் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது!" - நிதிஷ் உடனான கூட்டணி குறித்து லாலுவை எச்சரித்த பாஜக

உங்கள் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதாக லாலு பிரசாத் யாதவிடம் பா.ஜ.க மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
லாலுவுடன் நிதிஷ் குமார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார். அதோடு ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவியேற்கிறார். பா.ஜ.க தன்னுடைய கட்சியை உடைக்கப் பார்த்ததால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக நிதிஷ் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஓட்டுப்போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
ட்விட்டர்

அந்தக் கட்சியின் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இது தொடர்பாக அளித்தப் பேட்டியில், ``2019-ம் ஆண்டு தேர்தலில் உங்களின் சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றிபெற்றிருக்க முடியுமா? 2020-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நீங்கள் வெற்றி பெறவில்லையா? பீகார் மக்களை அவமானப்படுத்தி விட்டீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே நிதிஷ் குமார் அணி மாறியிருப்பது குறித்து பா.ஜ.க மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``லாலு பிரசாத்... யாதவ் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

லாலு - நிதிஷ்
லாலு - நிதிஷ்

பாம்பு தோலை உரித்துக்கொள்வது போல், நிதிஷ் குமார் தோலை மாற்றிக்கொண்டதாக லாலு பிரசாத் யாதவ் 2017-ம் ஆண்டு பதிவிட்டிருந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி, கிரிராஜ் சிங் தற்போது இப்படி பதிவிட்டிருக்கிறார். 2017-ம் ஆண்டு நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை கைவிட்டுவிட்டு பா.ஜ.க அணிக்குச் சென்றபோது லாலு பிரசாத் யாதவ் ட்விட்டர் பக்கத்தில், ``நிதிஷ் குமாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தோல். இதில் எதாவது சந்தேகம் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க-விடமிருந்து இரண்டாவது முறையாக நிதிஷ் குமார் விலகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.