Published:Updated:

மதுரை: ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்வியைத் தவிர்த்த எல்.முருகன்!

பழமுதிர்சோலை
News
பழமுதிர்சோலை

வேல் யாத்திரையைத் திருத்தணியில் தொடங்கியநிலையில், புயல், மழை காரணமாக தொடர்ந்து பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

புயல், மழை காரணமாக வேல் யாத்திரையை இடையில் நிறுத்தியிருந்த பா.ஜ.க தலைவர் எல்.முருகன், நாளைய தினம் திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்யவிருக்கிறார். இந்தநிலையில் நேற்று மாலை மதுரை மாவட்டத்தில் வேல் யாத்திரையைத் தொடங்கினார். அப்போது காவல்துறையினருக்கும் பா.ஜ.க-வினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

காரில் யாத்திரை வந்த முருகன்
காரில் யாத்திரை வந்த முருகன்

மேலூர் பா.ஜ.க-வினர், முருகனை வரவேற்பதற்காக பேருந்து நிலையம் அருகில் சாலையில் காவல்துறை அனுமதி இல்லாமல் லாரியை நிறுத்தி, அதன் மேல் தற்காலிக மேடை அமைத்திருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று காவல்துறையினர் அப்புறப்படுத்தக் கூறினர். இதனால் காவல்துறையினருக்கும் பா.ஜ.க-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு கூட்டம் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பிறகு வேறு இடத்துக்கு மேடை மாற்றப்பட்டதால் பதற்றம் தணிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அங்கிருந்து ஊர்வலமாக வந்து அழகர் மலையிலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஹெச்.ராஜா, மாநில நிர்வாகிகள் பேராசிரியர் சீனிவாசன், காயத்திரி ரகுராம், மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

எல்.முருகன்
எல்.முருகன்

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ``கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி வேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கிய நிலையில், மக்கள் மத்தியில் வேல் யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பட்டது. இடையே புயல், மழை காரணமாக தொடர்ந்து வேல் யாத்திரையைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் காரணமாக அறுபடை வீடுகளுக்கும் மட்டும் சென்று தரிசனம் செய்து நாளை திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்யவிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொள்ளவிருக்கிறார்" என்றவரிடம்,

எல்.முருகன்
எல்.முருகன்

`நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றித் தங்கள் கருத்து...’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒன்றும் பேசாமல் சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின்பு மதுரையில் முக்கியச் சாலை வழியாக காரில் யாத்திரை சென்று ஆங்காங்கு கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு இரவு திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்தார்.