Published:Updated:

பி.ஜே.பி Vs தி.மு.க... `பதிலடி' அரசியல்: இட ஒதுக்கீடும் இந்துக்களும்!

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

'கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலே தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்குகிறது' என்று பா.ஜ.க ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து விமர்சித்துவந்தன. இதுதான் தி.மு.க-வுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது...

'கறுப்பர் கூட்டத்துக்குப் பின்னால் இருப்பதே தி.மு.க-தான்' என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் பலவும் தி.மு.க-வுக்கு எதிராக அஸ்திரங்களைப் பாய்ச்சி வருகின்றன.

குறிப்பாக பா.ஜ.க தரப்பில் இந்த விஷயத்தை பலமாகப் பிடித்துக்கொண்டு பாய்ச்சல் காட்டிவருகின்றனர். கூடவே அ.தி.மு.க அமைச்சர்கள் சிலரும், ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் இந்த விஷயத்தின் சூட்டை விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கறுப்பர் கூட்டத்துக்கு தி.மு.க தரப்பிலிருந்து கண்டனமே தெரிவிக்கப்பட்டபோதும், விஷயம் திமுக-வுக்கு எதிரானதாகவே கனன்றுகொண்டிருக்கிறது. இதனால், `நாங்களும் இந்துக்கள்தான்' என்று பம்ம ஆரம்பித்திருக்கும் தி.மு.க தரப்பு, இந்த விஷயத்தை திசை திருப்புவதற்காக, 'சமூகநீதிக்கான போர்' என்று பழைய அஸ்திரத்தைத் தூசுதட்ட ஆரம்பித்துள்ளது!

'கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலே தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்குகிறது' என்று பா.ஜ.க ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து விமர்சித்துவந்தன. இதுதான் தி.மு.க-வுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது...

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதையடுத்து, தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலரும், `தி.மு.க இந்து விரோதக் கட்சியல்ல' என்கிற கோஷத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது.

மேலும், கறுப்பர் கூட்டத்தை வைத்து தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அஸ்திரம் எடுக்கவே வேறு வழியைத் தேடியது. அந்த நேரத்தில் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்கிற செய்தி வெளியானதும், அந்த விவகாரத்தை தி.மு.க இப்போது கையில் எடுத்துக்கொண்டுவிட்டது.

'கறுப்பர் கூட்டம்' சேனல் நிர்வாகி செந்தில்வாசன் தி.மு.க ஐ.டி விங்கின் முன்னாள் பொறுப்பாளர் என்று சொல்லப்படுகிறது. இதுதான் இப்போது தி.மு.க-வுக்குச் சிக்கலாகியுள்ளது. இதைக் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்ட பி.ஜே.பி தரப்பு, தி.மு.க ஐடி பிரிவு தலைவர் பழனிவேல் தியாகராஜனுடன் கறுப்பர் கூட்ட நிர்வாகி இருக்கும் படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டது.

`இதற்கு பதிலடியாகவே இட ஒதுக்கீடு விவகாரத்தை தி.மு.க கையிலெடுத்துள்ளது' என்கிறார்கள். இது குறித்து பிரசாந்த் கிஷோர் டீமின் ஆலோசனையும் தி.மு.க தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதில், ''இந்துக்களின் வாக்குகளை இப்போது நாம் கைப்பற்ற இட ஒதுக்கீடு விவகாரத்தை ஓங்கிப் பிடியுங்கள். அதன் மூலம் பா.ஜ.க-வுக்கும் செக் வைக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடமும் தி.மு.க-வின் செல்வாக்கு உயரும்'' என்று கோடிட்டுக் காட்ட, தனது ஆரம்பகால அஸ்திரத்தை மீண்டும் கையிலெடுத்துவிட்டது தி.மு.க என்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடைக்காமல் போனால் ஏற்படும் பாதகங்களை தி.மு.க முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளது. 'இந்துக்களுக்கு ஆதரவான கட்சியாகச் சொல்லப்படும் பா.ஜ.க அரசு, இந்து மக்களின் உரிமையைப் பறிக்கிறது' என்று ஒரு பிரசாரத்தை முன்வைத்து இப்போது களமாட ஆரம்பித்துள்ளது.

- இதன் உள்ளரசியல் விவகாரங்களை முழுமையாக ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியில் வாசிக்க க்ளிக் செய்க https://bit.ly/2P4Ipa7 > கறுப்பர் கூட்ட அந்தர் பல்டி... ஒதுக்கீட்டை எடுப்பா தூசு தட்டி! - பாயும் பி.ஜே.பி... பம்மும் தி.மு.க https://bit.ly/2P4Ipa7

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு