Published:Updated:

``சிவசேனாவை உடைப்பது எங்கள் இலக்காக இருந்தது; ஆனால், அது அவ்வளவு எளிதானது இல்லை” - பாஜக அமைச்சர்

கிரிஷ் மகாஜன்
News
கிரிஷ் மகாஜன்

``சிவசேனாவைப் பிளவுபடுத்துவதுதான் பாஜக-வின் இலக்காக இருந்தது’’ என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன் தெரிவித்திருக்கிறார்.

``சிவசேனாவை உடைப்பது எங்கள் இலக்காக இருந்தது; ஆனால், அது அவ்வளவு எளிதானது இல்லை” - பாஜக அமைச்சர்

``சிவசேனாவைப் பிளவுபடுத்துவதுதான் பாஜக-வின் இலக்காக இருந்தது’’ என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கிரிஷ் மகாஜன்
News
கிரிஷ் மகாஜன்

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்த்துவிட்டு பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்றது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, கட்சியை இரண்டாக உடைத்து 40 எம்.எல்.ஏ-க்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டுவந்தார். இதற்காக பாஜக அவருக்கு முதல்வர் பதவி கொடுத்திருக்கிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு குறித்து பாஜக-வில் தேவேந்திர பட்னாவிஸுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறுகையில், ``சிவசேனாவை உடைப்பதுதான் பாஜக-வின் இலக்காக இருந்தது. இந்த இலக்கு மிகவும் எளிதாக இல்லை.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீதுள்ள அதிருப்தியால்தான் அக்கட்சியிலிருந்து 40 பேர் வெளியேறியிருக்கின்றனர். 17 முதல் 18 வரை கட்சியிலிருந்து வெளியேறியவர்களை 50 பேராக அதிகரிப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது. ஏக்நாத் ஷிண்டே எப்படி முதல்வரானார்... அதைப்பற்றி நினைத்துப்பார்த்தால் எங்களால் நம்ப முடியவில்லை. ஆனால், எங்களது ஆபரேசனைத் தொடங்கினோம். ஏக்நாத் ஷிண்டே முன்னேறிச்சென்றார். அவரின் படையினர் அவரைப் பின்தொடர்ந்துவந்தனர். சாமுண்டா மாதாவின் ஆசியால் அனைவரும் ஒன்றுசேர்ந்தனர். எம்.எல்.ஏ-க்கள் ஷிண்டேவுக்கு மிகவும் பக்கபலமாக நின்றனர்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஓர் அலையடித்தது போன்று நடந்தது. அந்த அலை ஷிண்டேயை நேரடியாக முதல்வர் இருக்கையில் அமர்த்திவிட்டது. மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் அயராது பாடுபடுகின்றனர். தினமும் 4 அல்லது 5 மணி நேரமாவது உறங்கும்படி முதல்வர் ஷிண்டேயிடம் கேட்டுக்கொள்வேன். ஆனால், அவர் அதிகாலை 3 மணி வரை வேலை செய்கிறார். முதல்வரும், துணை முதல்வரும் இரவு பகலாக வேலைசெய்து மகாராஷ்டிராவில் நிலுவையிலுள்ள பிரச்னைகளைத் தீர்த்துவருகின்றனர். மாநிலத்தில் ஜனதா ராஜா ஆட்சியில் இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர்” என்றார்.

இதுவரை உட்கட்சிப் பிரச்னையால்தான் சிவசேனா உடைந்தது என்று பாஜக தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால், இப்போது வெளிப்படையாக நாங்கள்தான் சிவசேனாவை உடைத்தோம் என்று கூற ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான உறவை பலப்படுத்திவருகிறார்.