Published:Updated:

தெளிவான புரிதலுடன் ரஜினி - கமல்... வீணாகும் பி.ஜே.பி-யின் `விருது' அரசியல்!

தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் இந்த இருவரையுமே அரசியல் களத்தில் ஓர் அணியாக இணைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

"நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரே மாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?" விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2WMIous

"அதை நாங்கள் இருவரும் அல்லவா பேச வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இருவரும் பேசி முடிவுசெய்ய வேண்டும்."

ஆனந்த விகடன் பிரத்யேகமாக நடத்திவரும் 'பிரஸ் மீட்டில்' கேட்கப்பட்ட கேள்விக்கு, கமல் தந்த பதில் இது.

இதைத் தொடர்ந்து, 'இனி ரஜினி, கமல் இருவரின் அரசியல் பயணம் இப்படித்தான்' என்ற பேச்சுகள் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாகியிருக்கின்றன.

"என்னதான் விருதெல்லாம் கொடுத்து தூண்டில் போட்டாலும் பி.ஜே.பி-யிடம் சிக்க மாட்டார் ரஜினி. காரணம், பி.ஜே.பி-யின் பலம், பலவீனம் இரண்டையும் நன்றாகத் தெரிந்தவர் ரஜினி. அதேசமயம், தமிழகத்தின் தேவைக்காக கமலுடன் கைகோக்கவும் தயங்க மாட்டார். இதற்கு முன்னோட்டமாகத்தான் கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரையுலகப் பயணத்தைக் கொண்டாடவிருக்கும் 'கமல்-60' நிகழ்வு இருக்கக்கூடும்" என்கிறார், கமல், ரஜினி இருவரிடமும் நெருங்கிப் பேசக்கூடிய புத்தம் புதிய தயாரிப்பாளர் ஒருவர்.

கமலுக்கு நெருக்கமான சிலரிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, இதைப் பற்றி விவரமாகவே பேசினார்கள். "ரஜினி, 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், 'அரசியலுக்கு வரப்போகிறேன்' என்று சொன்ன இரண்டாவது மாதத்திலேயே 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியையே தொடங்கிவிட்டவர் கமல். தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் இந்த இருவரையுமே அரசியல் களத்தில் ஓர் அணியாக இணைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

தெளிவான புரிதலுடன் ரஜினி - கமல்... வீணாகும் பி.ஜே.பி-யின் `விருது' அரசியல்!

கமலின் திரையுலகப் பயணம் என்பது, ரஜினியின் பயணத்தைவிட முந்தையது. ஆனால், வாழ்நாள் சாதனையாளர் விருதை ரஜினிக்குக் கொடுத்ததைவைத்து சிலர் கமலிடம் வருத்தப்பட்டுள்ளனர். அதற்கு, 'ரஜினிக்கு விருது கொடுப்பதன் காரணம் எனக்கும் தெரியும் ரஜினிக்கும் தெரியும்' எனச் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிட்டார் கமல். தனக்கும் ரஜினிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் கமல் தெளிவாக இருக்கிறார். எல்லாம் எதிர்கால அரசியல் களத்தை மனதில்வைத்துதான்."

ரஜினி, கமல் இருவரும் இணைந்து கூட்டணி அமைப்பார்கள் என்பது உறுதியாகாத சூழலில், இருவரையும் இணைக்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக இருக்கும் சில புள்ளிகளுக்கு வெளியிலிருந்து மறைமுகமாக அழுத்தங்கள் கொடுக்கவும் சிலர் ஆரம்பித்திருக்கின்றனர்.

- ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ளது விரிவான உள்ளரசியல் அலசல் கட்டுரையை முழுமையாக வாசிக்க > பி.ஜே.பி-யின் 'விருது' தூண்டில்! - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்! https://www.vikatan.com/news/politics/bjp-government-announced-award-for-rajini

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

கமல்... நிழலும் நிஜமும்!

'அரசியலும் வன்முறையும் ஒப்பந்தம் செய்துகொண்டு அக்னி சாட்சியாக ஜோடி சேர்ந்துவிட்டன. அதன் சந்ததிகள், நாடெங்கும் ஊழல் தீ வளர்த்து அதில் நேர்மையை ஊற்றி யாகம் செய்கின்றன' - பின்னணிக் குரலோடு தொடங்கும் 'குருதிப்புனல்'. 'ஜனங்களுக்கு ஞாபகசக்தியே கிடையாது. உனக்கும் எனக்கும் மட்டும்தான் அந்த வியாதி. பிரக்ஞை இல்லாத இந்த ஆட்டுமந்தை, ஆட்டுப்பால் குடிக்கிற இந்தத் தாத்தா பின்னாடி போய்க்கிட்டிருக்கு. தாத்தா பக்ரீத் கொண்டாட போய்க்கிட்டிருக்கார் எனத் தெரியாது இந்த மட மந்தைக்கு. பிரஜைகள் நாட்டு நடப்பை நாடகமா பார்க்கிறாங்க. இந்த நாடகம் பார்க்கிறதுக்கு விமர்சகர்களுக்கு அனுமதி கிடையாது' - 'ஹேராம்' படத்தில் காந்தியைக் கொல்ல வேண்டும் எனக் கொதித்துக்கொண்டிருக்கும் ஒரு மதவாதப் பாத்திரம் பேசும் வசனம் இது.

கமல்
கமல்

இந்த வசனங்களுக்குச் சொந்தக்காரர் கமல்ஹாசன். திரைக்கு வெளியேயும் தொடர்ச்சியாக அரசியல் பேசிவந்தவர் கமல் என்ற அடிப்படையில், அவரது படங்கள் மிகுந்த கவனத்துக்குரியவையாகின்றன. நாத்திகம், பாலியல் குறித்த வெளிப்படையான பேச்சு, படத் தலைப்புகள், சென்சார் சர்ச்சைகள், காட்சிகள் மற்றும் வசனங்களில் வெளிப்படும் அரசியல் கருத்துகள் மீதான வழக்குகள் என சினிமா போலவே விறுவிறுப்பானது கமல்ஹாசனின் யதார்த்த வாழ்க்கையும். சிலரைப்போல், 'சினிமாவில் நான் பேசிய வசனங்களோடும் கருத்துகளோடும் என் யதார்த்த வாழ்க்கையைத் தொடர்புபடுத்தாதீர்கள்' என்று சொல்பவரல்ல கமல்ஹாசன்!

- திரையுலகில் பெருமைக்குரிய வகையில் 60 ஆண்டுகள் பயணித்து வந்திருக்கும் கமல்ஹாசன், கொண்டாடப்படப் வேண்டிய கலைஞன். விரிவான ஜூனியர் விகடன் சிறப்பு அலசலை வாசிக்க > கமல் 60: சினிமாவும் அரசியலும் கமலுக்கு வேறுவேறல்ல! https://www.vikatan.com/government-and-politics/cinema/kamal-haasans-60-years-cinema-life

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு