Published:Updated:

சர்ச்சைப் பேச்சு, தொடர் மிரட்டல், வழக்கு பதிவு... நுபுர் ஷர்மா தலைமறைவு?!

நுபுர் ஷர்மா

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொடர் மிரட்டல் காரணமாக தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சர்ச்சைப் பேச்சு, தொடர் மிரட்டல், வழக்கு பதிவு... நுபுர் ஷர்மா தலைமறைவு?!

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொடர் மிரட்டல் காரணமாக தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
நுபுர் ஷர்மா

நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, ஜிண்டால் ஆகியோரைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களால் வட மாநிலத்தில் வன்முறை வெடித்தது. நுபுர் ஷர்மா மீது மும்பை, புனே, டெல்லியில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. வளைகுடா நாடுகள் நுபுர் ஷர்மாவின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து நுபுர் ஷர்மாவை பாஜக சஸ்பெண்ட் செய்தது. நுபுர் ஷர்மாவிடம் விசாரிப்பதற்காக மும்பை போலீஸார் டெல்லி சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

நவீன்குமார் ஜிண்டால், நுபுர் ஷர்மா
நவீன்குமார் ஜிண்டால், நுபுர் ஷர்மா

மும்பை போலீஸார் டெல்லியில் ஐந்து நாள்களாக முகாமிட்டு நுபுர் ஷர்மாவைத் தேடிவருகின்றனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை, தலைமறைவாகிவிட்டார் என்கிறார்கள். ஏற்கனவே நுபுர் ஷர்மாவுக்குத் தொடர்ந்து மிரட்டல்வந்து கொண்டிருந்தது. அதோடு போலீஸ் வழக்குகளும் இருந்ததால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்கிறார்கள். நுபுர் ஷர்மா தான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதே போன்று இந்த விவகாரத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜிண்டாலும் தலைமறைவாகிவிட்டார். அவரும் மிரட்டல் காரணமாக தனது குடும்பத்தை டெல்லியிலிருந்து யாருக்கும் தெரியாத இடத்துக்கு இடமாற்றம் செய்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. யாரும் தனது குடும்பம் இருக்கும் இடத்தை யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர். நாட்டில் நபிகள் நாயகம் சர்ச்சை அடங்கும் முன்பாக அக்னிபத் சர்ச்சை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism