Published:Updated:

தஞ்சை: `மோடி பிறந்தநாளில் பேசும் அளவுக்கு நடிகர் சூர்யா பெரிய ஆள் இல்லை!’- ஜீவஜோதி

ஜீவஜோதி
ஜீவஜோதி ( ம.அரவிந்த் )

`பிரதமர் மோடியின் பிறந்தநாளில் பேசும் அளவுக்கு சூர்யா ஒன்று பெரிய ஆள் கிடையாது. அவரைப் பற்றிப் பேச விரும்பவில்லை’ என்று பி.ஜே.பி-யின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி தெரிவித்திருக்கிறார்.

தஞ்சாவூரில் பி.ஜே.பி சார்பில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், `` `மனுநீதி தேர்வு’ என நீட் தேர்வை நடிகர் சூர்யா குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளில் பேசும் அளவுக்கு சூர்யா ஒன்று பெரிய ஆள் கிடையாது. அவரைப் பற்றிப் பேச விரும்பவில்லை’’ என்று ஜீவஜோதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மோடி பிறந்தநாள் விழாவில்
மோடி பிறந்தநாள் விழாவில்

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியிலுள்ள குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் பி.ஜே.பி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார். இதில் கலந்துகொண்ட மாநிலத் துணைத் தலைவர் புரட்சி கவிதாசன், முன்னதாக கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நீட் தேர்வு: நடிகர் சூர்யா அறிக்கை.. `நீதிமன்ற அவமதிப்பு’ என தலைமை நீதிபதிக்கு கடிதம்

தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசினார். ``பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்கள்.எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடியிருக்கிறோம். இதுவே பி.ஜே.பி வளர்ந்திருக்கிறது என்பதற்குச் சிறந்த உதாரணம்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

நீட் தேர்வு வரவேற்கத்தக்கதுதான். நீட் தேர்வைவைத்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தற்குறியான அரசியல் செய்துவருகிறார்கள். நீட் தேர்வுக்காக மதுரையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் கடிதத்தைப் படித்துப் பார்த்தோம். எங்கள் எல்லோரிடமும் அந்த மாணவி எழுதிய கடிதம் இருக்கிறது.

அந்த மாணவி யாரையும் குறை சொல்லி எழுதவில்லை. தன்னுடையை இயலாமையை, தனக்கு இருந்த பயத்தை வெளிக்காட்டி அந்தக் கடிதத்தை எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். திறமையான டாக்டர்கள் வேண்டுமென்றால் நீட் தேர்வு அவசியமான ஒன்று.

மோடி பிறந்தநாள் விழாவில் ஜீவஜோதி
மோடி பிறந்தநாள் விழாவில் ஜீவஜோதி

`மனுநீதி தேர்வு’ என நீட் தேர்வை நடிகர் சூர்யா குறிப்பிட்டிருக்கிறார். சூர்யா ஒரு தற்குறியான மனிதர். பிரதமர் மோடியின் பிறந்தநாளில் பேசும் அளவுக்கு சூர்யா ஒன்று பெரிய ஆள் கிடையாது. அவரைப் பற்றிப் பேச விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு