Published:Updated:

``விலைவாசி உயர்வுக்கு பாஜக-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம்" - கே.எஸ்.அழகிரி தாக்கு

கே.எஸ்.அழகிரி

``நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் கராணம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.

``விலைவாசி உயர்வுக்கு பாஜக-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம்" - கே.எஸ்.அழகிரி தாக்கு

``நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் கராணம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பி-யுமான ராகுல் காந்தியின் `இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம்’ பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ``இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களைப் பிரிக்காத வகையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தற்போது நாட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கலாசாரம், மக்களைப் பிரிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்ட நிலையில் இருக்கிறது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் கராணம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் பெருகும்’ என பிரதமர் மோடி சொன்னார். அதுவும் நடக்கவில்லை, பா.ஜ.க அரசின் இந்த வீழ்ச்சி குறித்து மக்களிடம் எடுத்துக்கொண்டு செல்ல இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். பா.ஜ.க-வுக்கும் சுதந்திரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் பங்கெடுத்திருக்கின்றன. பா.ஜ.க இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி. இவ்வளவு காலம் ஏன் பா.ஜ.க பங்கெடுக்கவில்லை?

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சுதந்திர தினநாள் அன்று ஏன் கொடி ஏற்றவில்லை... ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இதுவரை இரண்டு தடவை மட்டுமே சுதந்திரக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தபோதும், மறைந்த வாஜ்பாய் பிரதமராகச் சென்றபோதும் என இரண்டு முறை மட்டுமே கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. இப்போது கொண்டாடுவதற்கு காரணம் என்ன?” என்றார்.