Published:Updated:

பாரத் ஜோடோ யாத்திரையில் கே.ஜி.எஃப் 2 பாடல்... ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

யாத்திரையில் ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கே.ஜி.எஃப் -2 படத்தின் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கைத் தடைசெய்ய கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

பாரத் ஜோடோ யாத்திரையில் கே.ஜி.எஃப் 2 பாடல்... ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கே.ஜி.எஃப் -2 படத்தின் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கைத் தடைசெய்ய கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
யாத்திரையில் ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இந்த யாத்திரை இப்போது தெலங்கானாவிலிருந்து மகாராஷ்டிராவுக்குள் வந்திருக்கிறது. நாண்டெட் மாவட்டத்தில், மகாராஷ்டிரா எல்லையில் ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். நேற்று இரவு ராகுல் காந்தி குருத்வாரா ஒன்றில் தங்கினார். அந்த குருத்வாராவில் நடக்கும் குருநானக் ஜயந்தியிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இந்த யாத்திரையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த ஜோடோ யாத்திரை தொடர்பாக காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கன்னடப் படமான `கேஜிஎஃப்-2’ படத்தின் பாடல்களைப் பயன்படுத்தி, ட்விட்டரில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அனுமதி இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் `கேஜிஎஃப்-2’ படத்தின் பாடல்களைப் பயன்படுத்திவிட்டதாக பெங்களூரு யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தில் எம்.ஆர்.டி.மியூசிக் சார்பாக அதன் மேலாளர் நவீன் குமார் புகார் செய்தார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் கே.ஜி.எஃப் 2 பாடல்... ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

காப்புரிமை விதிகளை மீறி படத்தின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தின் பாடல்களை விலைக்கு வாங்க, தங்களது கம்பெனி அதிக அளவு முதலீடு செய்திருப்பதாகக் கூறி சிடி ஒன்றையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உட்பட மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதை விசாரித்த கோர்ட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, இதை அங்கீகரிப்பது இசைத் திருட்டை ஊக்குவிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவுகளுக்குத் தற்காலிகமாகத் தடைவிதிக்க வேண்டும் என்றும், பாரத் ஜோடோ யாத்திரை பிரசாரம் தொடர்பான ட்விட்டர் பதிவுக்குத் தற்காலிகமாகத் தடைவிதித்தும் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், ஜோடோ யாத்திரை தொடர்பான இரண்டு லிங்க்குளுக்கும் கோர்ட் தடைவிதித்தது. இந்தத் தடை குறித்துக் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, `கோர்ட் நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. கோர்ட் உத்தரவு நகலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சமூக வலைத்தளத்தை பார்த்துத்தான் கோர்ட் உத்தரவு குறித்துத் தெரிந்துகொண்டோம். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

பாரத் ஜோடோ யாத்திரையில் கே.ஜி.எஃப் 2 பாடல்... ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

மகாராஷ்டிராவுக்குள் ஜோடோ யாத்திரை இருக்கும்போது வரும் 10-ம் தேதி சரத் பவார் அதில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் சரத் பவார், கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக்குழுக் கூட்டம் ஷீர்டியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குக்கூட டாக்டர்களின் துணையோடு சென்று சரத் பவார் உரையாற்றியிருக்கிறார். இதனால் ஜோடோ யாத்திரையில் சரத் பவார் தனது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கலந்துகொள்வார் என்று முன்னாள் முதல்வர் அசோக் சவான் தெரிவித்திருக்கிறார். இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நாண்டெட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவிருக்கிறார். குஜராத் உட்பட இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையில் தீவிரமாக இருக்கிறார்.