Published:Updated:

இங்கே ஸ்டாலின், அங்கே அமித்ஷா... 'அப்செட்' பின்னணி என்ன?

ஸ்டாலின்
News
ஸ்டாலின்

சிவசேனாவின் வெற்றியாகத் தான் பார்க்க முடியும். தனிப்பட்ட நமது வெற்றி எனச் சொல்ல முடியாது' என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறதாம்

"தி.மு.க-வும் நாங்குநேரியில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்கிறார்கள். பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் ஸ்டாலின் மனு வாங்கி வந்தார். 'வாங்கிய மனுக்கள்மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார், அவரால் என்ன செய்ய முடியும்?' என்று எடப்பாடி பழனிசாமி கூட்டத் துக்குக் கூட்டம் பற்றவைக்க... அதுவும் வேலை செய்துள்ளது. விக்கிரவாண்டியில் பொன்முடியின் மெத்தனப்போக்கும் இந்தத் தோல்விக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்."

"ஓஹோ!"

"தோல்விக்குக் காரணமாக, மற்றொரு முக்கியமான குற்றச்சாட்டை தி.மு.க-வினரே சொல்கிறார்கள். 'இடைத்தேர்தல் பிரசாரங்களில், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சாதனைகளை முன்னிறுத்தி ஸ்டாலின் தரப்பு பேசவில்லை. நாடார் சமூகத்து ஓட்டுகளைக் கவரும்வகையில் கனிமொழியையும் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. உதயநிதியை மட்டுமே முன்னிறுத்தினார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் பலமாக இருக்கும் வி.சி-க்களைக்கூட கட்சித் தலைமை அரவணைக்கத் தவறிவிட்டது. இவையெல்லாம்தான் தோல்விக்குக் காரணம்' என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசுகிறார்களாம்!"

இங்கே ஸ்டாலின், அங்கே அமித்ஷா... 'அப்செட்' பின்னணி என்ன?

"தி.மு.க தலைமையின் ரியாக்‌ஷன் என்னவாம்?"

"நாங்குநேரி தோல்வியைப் பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், விக்கிரவாண்டியில் இத்தனை பொறுப்பாளர் களைக் களத்தில் இறக்கியும் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றதை அதிர்ச்சியுடன்தான் பார்க்கிறது கட்சித் தலைமை. வேட்பாளர் தேர்வில் சொதப்பலா என்று விசாரணையும் நடக்கிறதாம்."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"இரண்டு மாநிலத் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன?"

"அமித் ஷா அப்செட் எனத் தகவல். ஹரியானாவில் பா.ஜ.க தனித்து நின்றது. மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. ஹரியானாவில் நிலைமை இழுபறியாகும் என பா.ஜ.க தரப்பு நினைத்துப் பார்க்கவே இல்லையாம். 'மகாராஷ்டிர வெற்றியைக்கூட சிவசேனாவின் வெற்றியாகத் தான் பார்க்க முடியும். தனிப்பட்ட நமது வெற்றி எனச் சொல்ல முடியாது' என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறதாம். 'இரண்டு மாநிலங் களிலும் அசுர வெற்றியைப் பெற்றிருந்தால் மோடியும் அமித் ஷாவும் பா.ஜ.க அலுவலகத்துக்கே வந்து வெற்றியைக் கொண்டாடியிருப்பார்கள்' என்கிறார்கள்.

"சிவசேனா தரப்பு என்ன சொல்கிறது?"

''ஆரம்பத்தில் 'துணை முதல்வர் பதவி போதும்' என்றுதான் சொல்லியிருந்தனர் சிவசேனா தலைவர்கள். ஆனால், கடந்த முறையைவிட தற்போது 15-க்கும் மேற்பட்ட இடங்கள் பி.ஜே.பி-க்குக் குறைந்துவிட்டன. அதனால், 'அமைச்சரவையில் பாதிக்குப் பாதி இடம் வேண்டும்' எனச் சொல்லத் தொடங்கியிருக் கிறார்களாம் அந்தத் தலைவர்கள். கடந்த முறைபோல் சிவசேனாவை அடக்கிவைக்க முடியாது என்ற நிலையில், அங்கும் பா.ஜ.க-வுக்குத் தலைவலிதான் என்கிறார்கள்."

இங்கே ஸ்டாலின், அங்கே அமித்ஷா... 'அப்செட்' பின்னணி என்ன?

- தேர்தல் களத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? | விக்கிரவாண்டி வெற்றியில் பங்கு கேட்கும் பா.ம.க | அ.தி.மு.க-வின் வெற்றியை பா.ஜ.க எப்படிப் பார்க்கிறது? | நாங்குநேரியில் காங்கிரஸ் தோல்விக்கு என்னதான் காரணம்? | டெல்லிக்கு அடிக்கடி செல்லும் உச்ச நடிகரின் மனைவி | கல்கி மூலம் நாயுடுவுக்கு செக்... இன்னும் நிறைய நிறைய வெளிவராத தகவல்கள் சொல்லும் ஜூனியர் விகடன் கழுகார் பகுதியை முழுமையாக வாசிக்க > முதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்... சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-oct-30

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க> http://bit.ly/2MuIi5Z |