Published:Updated:

``தாக்கரே ஆதரவாளர்கள் காலை உடையுங்கள்; ஜாமீனில் எடுக்கிறேன்” - ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

பிரகாஷ் சுர்வே பேசுகிறார்

``உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களின் காலை உடையுங்கள். உடனே ஜாமீனில் எடுக்கிறேன்” என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

``தாக்கரே ஆதரவாளர்கள் காலை உடையுங்கள்; ஜாமீனில் எடுக்கிறேன்” - ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

``உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களின் காலை உடையுங்கள். உடனே ஜாமீனில் எடுக்கிறேன்” என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
பிரகாஷ் சுர்வே பேசுகிறார்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கடந்த ஜூன் இறுதியில் இரண்டாக உடைந்தது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணி செயல்பட்டுவருகிறது. தற்போது இரண்டு அணிகளும் தங்களது பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னை தேர்தல் கமிஷனுக்குச் சென்றிருக்கிறது. மாநிலம் முழுவதுமுள்ள சிவசேனா அலுவலங்களைக் கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒருசில இடங்களில் வன்முறையும் நடந்திருக்கிறது.

அண்மையில், மும்பை அருகே நடந்த நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ பிரகாஷ் சுர்வே கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் தக்க பதிலடி கொடுங்கள். தாதாகிரித்தனத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களை அடியுங்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன். உங்களால் அவர்களின் கையை உடைக்க முடியவில்லையெனில் காலை உடைத்துவிடுங்கள்.

``தாக்கரே ஆதரவாளர்கள் காலை உடையுங்கள்; ஜாமீனில் எடுக்கிறேன்” - ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

உங்களை அடுத்த நாளே ஜாமீனில் எடுத்துவிடுகிறேன். கவலைப்படாதீர்கள். நாங்கள் யாருடனும் சண்டையிட மாட்டோம். ஆனால் யாராவது எங்களுடன் சண்டையிட்டால் நாங்கள் அவர்களை சும்மாவிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களைக் குறிவைத்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்திலும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-வான சந்தோஷ் பங்கர் என்பவ,ர் ஹின்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்குத் தரம் குறைந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக கேட்டரிங் மேலாளரை அடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. மற்றொரு புறம் ஏக்நாத் ஷிண்டே அணியிலும் விரிசல் விழ ஆரம்பித்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே அணியில் இருக்கும் சில எம்.எல்.ஏ-க்கள் அடிக்கடி உத்தவ் தாக்கரேயைப் புகழ்ந்து பேசுகின்றனர். இதனால் அமைச்சரவை முழுமையாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு ஏக்நாத் ஷிண்டே அணியிலுள்ள எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி எழுப்பலாம் என்று தெரிகிறது. தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியிலிருந்து ஒன்பது பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்கள் பதவிப் பறிப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அமைச்சரவையை முழுமையாக விரிவுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.