Published:Updated:

இந்திய அரசியலில் இடதுசாரிகளால் மிகப்பெரிய தாக்கம் சாத்தியமே... எப்படி?'

கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக காங்கிரஸை எதிர்க்கவில்லை' என்பதே பிளவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் அந்தப் பிளவுக்கு உண்மையான காரணம்

இந்தியாவில், மக்களுக்கான சமூகப் பொருளாதார மாற்றங்களை அதிகமாக முன்மொழிந்தவர்களும் கம்யூனிஸ்ட்கள்தான். இந்த முன்மொழிவு இல்லாமல் எந்தச் சட்டமும் வரவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, நிலமற்ற ஏழைகளுக்கு நிலம், வீடற்றவர்களுக்கு வீட்டுமனை, விவசாயிகளுக்கான உரிமைகள், பழங்குடி மக்களுக்கு உத்தரவாதமான சட்டங்கள் என இவற்றில் எதுவும் கம்யூனிஸ்ட்கள் இல்லாமல் வந்து விடவில்லை. இந்த உரிமைகளையும் சட்டங்களையும் பெறுவதற்காகப் பல அடக்குமுறைகளையும் ஏராளமான உயிர்த் தியாகங்களையும் செய்தது கம்யூனிஸ்ட் இயக்கம்தான்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சுதந்திர இந்தியாவிலும் கடுமையான பல சோதனைகளையும் அடக்குமுறைகளையும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்தது. ஹைதராபாத் நிஜாம் உட்பட இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. 'சமஸ்தானங்கள் தனியாகவும் இருக்கலாம்; இந்தியாவுடன் சேர்ந்தும் இருக்கலாம். அது சமஸ்தானங்களின் விருப்பம்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள். ஆகையால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா வுடன் சேருவதற்கு பல சமஸ்தானங்கள் மறுத்தன. சமஸ்தானங்களில் நிலக்குவியல் இருந்தது. சமூகத்தின் பின்தங்கிய நிலைமைகள் இருந்தன. ஹைதராபாத் நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்கள் நின்றனர். அந்தப் போராட்டத்தில், கிட்டத்தட்ட 30,000 கம்யூனிஸ்ட்கள் மரணமடைந்தனர். கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு அது மிகப்பெரிய இழப்பு.

இந்திய அரசியலில் இடதுசாரிகளால் மிகப்பெரிய தாக்கம் சாத்தியமே... எப்படி?'

1952-ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், அதிகமான இடங்களில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங் களை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட சென்னை ராஜதானியில், கம்யூனிஸ்ட்கள் ஆட்சியமைக்கக் கூடிய சூழல்கூட இருந்தது. ஆனால், சில காரணங்களால் ஆட்சியமைக்க முடியவில்லை.

1964-ம் ஆண்டுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலம் வாய்ந்த அரசியல் இயக்கமாக இருந்தது. ஆனால், 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, கட்சியின் வெகு மக்கள் செல்வாக்கு தேசிய அளவில் குறையத் தொடங்கியது. ஆனாலும், பிளவுக்குப் பிறகு சில மாநிலங்களில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வர முடிந்தது. சி.பி.எம் தலைமையிலான இந்த ஆட்சியில் சி.பி.ஐ அங்கம் வகித்தது. தற்போது, கேரளாவில் நடைபெறும் இடது ஜனநாயக முன்னணி அரசிலும் சி.பி.ஐ இடம்பெற்றுள்ளது. இந்திய அளவில் பொதுவான மாற்றம் நிகழ, கட்சியில் ஏற்பட்ட பிளவு ஒருவிதமான பின்னடைவை உருவாக்கிவிட்டது என்ற உண்மையை மறுக்க முடியாது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2v7ur0n

'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக காங்கிரஸை எதிர்க்கவில்லை' என்பதே பிளவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் அந்தப் பிளவுக்கு உண்மையான காரணம். சீனாவும் ரஷ்யாவும் கம்யூனிசத்தை அடைவதற்கு வெவ்வேறு கொள்கை வழிமுறை களைக்கொண்டிருந்தன. அப்போது, சீன ஆதரவு நிலைப்பாட்டை சி.பி.எம்-மும், ரஷ்ய ஆதரவு நிலைப் பாட்டை சி.பி.ஐ-யும் எடுத்தன. அதுதான் பிளவுக்குக் காரணம்.

ஆனால், இன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரே இயக்கமாக இணைய வேண்டியது மிகவும் அவசியமானது. சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு, உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில், பிளவுகள் தேவையில்லை என்ற குரல் வலுவாக எழுந்தது. இந்தியாவில் தனித்தனியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கட்சியாகச் சேர்வதே நல்லது. ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்களும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு 'ஒரே கம்யூனிஸ்ட் கட்சி' என்று வருமானால், இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை இடதுசாரி களால் ஏற்படுத்த முடியும்.

இந்திய அரசியலில் இடதுசாரிகளால் மிகப்பெரிய தாக்கம் சாத்தியமே... எப்படி?'

நேபாளத்தில், முரண்பட்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கட்சியாக ஆன பிறகுதான், அங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்சிப் பொறுப்பு கிடைத்தது. உலகமயத்தின் தீவிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதுமான முழக்கம். ஒற்றுமையாக இருப்பது என்ற கருத்தில் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளுமே வேறுபடவில்லை. இருவருமே அதைப் பேசுகிறார்கள். ஆனாலும், குறிப்பிட்ட கால வரையறை வகுத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கட்சியாக மாற வேண்டும். அதுதான் இன்றைய உலகமயமாக்கலை எதிர்ப்பதற்கும் மூர்க்கம்கொண்ட பா.ஜ.க-வின் தவறான அரசியலைத் தகர்ப்பதற்கும் அவசியமாக இருக்கிறது. அதை நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் அடியெடுத்து வைப்பதுதான் இன்றைய தேவையாகும்.

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், ஜூ.வி 2020 சிறப்பிதழில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > இந்தியாவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி! https://www.vikatan.com/news/politics/cpi-senior-leader-c-mahendran-about-communist

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு