Published:Updated:

மகாராஷ்டிரா: ஷிண்டே அரசு ஆட்சி அமைத்தும் அமைச்சரவையை விரிவுபடுத்துவதில் சிக்கல் - என்ன காரணம்?!

மகராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியேற்று ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில், அமைச்சரவை பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது!

மகாராஷ்டிரா: ஷிண்டே அரசு ஆட்சி அமைத்தும் அமைச்சரவையை விரிவுபடுத்துவதில் சிக்கல் - என்ன காரணம்?!

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியேற்று ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில், அமைச்சரவை பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது!

Published:Updated:
மகராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு

மகாராஷ்டிராவில் கடந்த மாத தொடக்கத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. ஏக்நாத் ஷிண்டேயுடன் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றிருக்கிறார். அரசு பதவியேற்று ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவைப்பது, அரசாணைகளை வெளியிடுவதில் மிகவும் பிஸியாக இருக்கின்றனர் என்கிறார்கள் எதிர்த்தரப்பினர். இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் மீது தற்போது விசாரணை நடந்துவருவதால் அமைச்சரவை பதவியேற்பதில் சிக்கல் இருந்துவருகிறது. ஏக்நாத் ஷிண்டேயும், தேவேந்திர பட்னாவிஸும் வியாழக்கிழமை டெல்லி செல்வதாக இருந்தது.

மகாராஷ்டிரா: ஷிண்டே அரசு ஆட்சி அமைத்தும் அமைச்சரவையை விரிவுபடுத்துவதில் சிக்கல் - என்ன காரணம்?!

ஆனால் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு ஓய்வெடுத்துவருகிறார். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மட்டும் வியாழக்கிழமை அமைச்சரவைப் பட்டியலோடு டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அவர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்துவிட்டு வந்தவுடன் ஞாயிற்றுக்கிழமைக்குள் அமைச்சரவை பதவியேற்கும் என்று ஏக்நாத் ஷிண்டே அணி செய்தித் தொடர்பாளர் தீபக் கேசர்கர் தெரிவித்தார். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகாராஷ்டிரா: ஷிண்டே அரசு ஆட்சி அமைத்தும் அமைச்சரவையை விரிவுபடுத்துவதில் சிக்கல் - என்ன காரணம்?!

மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``இந்த மாதம் 15-ம் தேதிக்குள் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். அதற்குள் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால தீர்ப்பையாவது வழங்கும் என்று ஏக்நாத் ஷிண்டே அணியினர் எதிர்பார்க்கின்றனர். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு தள்ளிவைத்திருக்கிறது.

அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்துகொள்வதிலும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும், பாஜக-வுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. முந்தைய அரசில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்த அமைச்சரவை இலாகாக்கள் தங்களுக்கு வேண்டும் என்றும், சிவசேனாவிடமிருந்த இலாகாக்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஏக்நாத் ஷிண்டேயிடம் பாஜக கூறிவருகிறதாம். ஆனால் ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு நிதித்துறை வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.