Published:Updated:

ஐ.ஏ.எஸ் கேடர் விதிகளை மாற்ற மத்திய அரசு திட்டம்: `பழிவாங்கல் நடவடிக்கையாக அமையக்கூடும்’ - கமல்ஹாசன்

கமல்

`கேடர் சட்டத் திருத்த மசோதா மாநில அரசின் உரிமைக்கு எதிரானது’’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் கேடர் விதிகளை மாற்ற மத்திய அரசு திட்டம்: `பழிவாங்கல் நடவடிக்கையாக அமையக்கூடும்’ - கமல்ஹாசன்

`கேடர் சட்டத் திருத்த மசோதா மாநில அரசின் உரிமைக்கு எதிரானது’’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கமல்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்றும் மசோதாவில் திருத்தம் செய்வது தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதம், மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் (கேடர்) விதிகள், 1954-ல் திருத்தம் குறித்து கடிதம் எழுதி கருத்து கேட்டிருந்தது.

இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ``இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தொடர்பான விதிகளில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்கள், மாநில அரசின் உரிமைக்கு எதிரானவை.

தற்போதைய சட்ட நடைமுறைப்படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்ற விரும்பினால் அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகிறது.

மோடி - மத்திய அரசு
மோடி - மத்திய அரசு

ஆனால், மத்திய அரசு கொண்டுவரும் இந்தத் திருத்தத்தால், மாநில அரசின் அனுமதி அல்லது ஒப்புதல் இன்றி மத்திய அரசுப் பணிக்கு மாநில அரசு அதிகாரிகளை உடனடியாக மாற்றிவிட முடியும். இது நிர்வாகரீதியாக மாநில அரசுக்கும், மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஊறுவிளைவிக்கும். மேலும் இது பழிவாங்கல் நடவடிக்கையாகவும் அமையக்கூடும். அதற்கு மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு ஓய்வு பெறும் நாளன்று நடந்த சம்பவமே சான்று.

கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் நாட்டில், இது போன்ற திருத்தங்கள் அமல்படுத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. எனவே இது போன்ற முயற்சிகளை மத்திய அரசு விட்டொழிக்க வேண்டும். மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுபோல, தமிழ்நாடு அரசும் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கடந்த 18-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்றும் மசோதாவில் திருத்தம் செய்வது மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் செயல்; கேடர் விதிகள் திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது" எனப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism