Published:Updated:

``நிலக்கரி தட்டுப்பாடு பற்றி பேசும் ராகுல், நிலக்கரி ஊழல் பற்றியும் பேச வேண்டும்" - மத்திய அமைச்சர்

ராகுல் காந்தி - அமைச்சர் பிரகலாத் ஜோஷி ( ட்விட்டர் )

நிலக்கரி விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.

``நிலக்கரி தட்டுப்பாடு பற்றி பேசும் ராகுல், நிலக்கரி ஊழல் பற்றியும் பேச வேண்டும்" - மத்திய அமைச்சர்

நிலக்கரி விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published:Updated:
ராகுல் காந்தி - அமைச்சர் பிரகலாத் ஜோஷி ( ட்விட்டர் )

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில், "வெறுப்பின் புல்டோசரை இயக்குவதை நிறுத்திவிட்டு, நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குமாறு நான் மோடி அரசிடம் வலியுறுத்துகிறேன். இன்று, நிலக்கரி மற்றும் மின்சார நெருக்கடி நாடு முழுவதும் பேரழிவை உருவாக்கியுள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன் - இந்த நெருக்கடி சிறு தொழில்களை அழிக்கும், இதனால் வேலையின்மை மேலும் அதிகரிக்கும். 

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சிறு குழந்தைகளால் இந்த வெப்பத்தைத் தாங்க முடியாது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உயிர்கள் இதனால் பணயம் வைக்கப்படும் நிலை உருவாகும். ரயில் மற்றும் மெட்ரோ சேவைகளை நிறுத்துதலால் மேலும் அதிக நிதி இழப்பு ஏற்படும். நிலக்கரி அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் நிலக்கரி நெருக்கடி காரணமாகப் பல மாநிலங்கள் மின் தடையால் தத்தளிக்கின்றன. கோல் இந்தியா லிமிடெட் ஏப்ரல் 2022 இல் அதன் உற்பத்தியில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 27.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், ஏப்ரல் மாதத்தில் வெப்பம் அதிகமானதின் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலக்கரி
நிலக்கரி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மின்வெட்டை எதிர்கொள்கின்றனர். ரஷ்யா-உக்ரைன் மோதலால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், சில மின் உற்பத்தி நிலையங்கள் முழுத் திறனுடன் செயல்படாததாலும் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி
நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி
ட்விட்டர்

இதை மத்திய அரசு விரைவில் சரிசெய்தாக வேண்டும். இல்லையென்றால் நாடு பெரும் சிக்கலை எதிர்கொள்ளும்" எனப் பதிவிட்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகுல் காந்தியின் அந்த கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``இந்தியாவின் நிலக்கரி நெருக்கடி குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கள் அவரை போலி ஜோதிடராக  இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காங்கிரஸின் ஆட்சியின் கீழ் நடந்த நிலக்கரி ஊழல் எவ்வளவு பெரியது என்பது குறித்து  ராகுல் காந்தி உலகுக்குச் சொல்ல வேண்டும். 

நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி
நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி
ட்விட்டர்

இன்றைய நாள்களில் ராகுல் காந்தி போலி ஜோதிடராக மாறிவிட்டார். நாட்டில் நிலக்கரி பற்றாக்குறையால் என்ன நடக்கப் போகிறது என்பதைச் சொல்வதை விட, எவ்வளவு பெரிய நிலக்கரி ஊழல் நடந்தது என்பதை நாட்டுக்குச் சொல்ல வேண்டும். அவரின் கட்சி ஆட்சியின் போது இந்த மோசடியால் நாட்டுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதைத் தெளிவாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism