Published:Updated:

மகாராஷ்டிரா ஐ.டி ரெய்டு: ரூ.130 கோடிக்கு பினாமி சொத்து! -உத்தவ் தாக்கரேவுக்கு செக்-கா?

யஷ்வந்த் ஜாதவ்

மும்பை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவருமான யஷ்வந்த் ஜாதவ் ரூ.130 கோடி அளவுக்குச் சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா ஐ.டி ரெய்டு: ரூ.130 கோடிக்கு பினாமி சொத்து! -உத்தவ் தாக்கரேவுக்கு செக்-கா?

மும்பை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவருமான யஷ்வந்த் ஜாதவ் ரூ.130 கோடி அளவுக்குச் சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Published:Updated:
யஷ்வந்த் ஜாதவ்

மும்பை மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவராக இருப்பவர் யஷ்வந்த் ஜாதவ். இவருடைய மனைவி யாமினி ஜாதவ், பைகுலா சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் திடீர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு தொடர்ந்து 35 இடங்களில் 72 மணி நேரம் வரை நடந்தது. மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பீமல் அகர்வால், மதானி, பிபின் ஜெயின் போன்றவர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

இதில் அகர்வால் இதற்கு முன்பு மாநகராட்சிக்குத் தரம் குறைந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் உபகரணங்களை சப்ளை செய்ததாக அமலாக்கப் பிரிவால் கைதுசெய்யப்பட்டவர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்க்கு மிகவும் வேண்டப்பட்டவராகக் கருதப்படும் யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ``யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.130 கோடிக்கு சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாமினி ஜாதவ்
யாமினி ஜாதவ்

அவை 36 பினாமி சொத்துகளாக இருக்கின்றன. ஜாதவ் குடும்பத்தினர், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் மொத்தம் 36 சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம் சர்வதேச ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி ஒப்பந்ததாரர்களும், யஷ்வந்த் ஜாதவும் சேர்ந்துகொண்டு செயல்பட்டிருப்பதும், பணிக்களுக்கான தொகையை அதிகரித்துக் காட்டி பணம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

மாநகராட்சி ஒப்பந்தாரர்களிடம் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதைக் குறைக்க, ஒப்பந்ததாரர்கள் செலவுக் கணக்கை அதிகரித்துக் காட்டியிருப்பது ரெய்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் காட்டாமல், அதிக அளவு சொத்துகள் வாங்கப் பணம் செலவிடப்பட்டிருக்கிறது. கணக்கில் வராத வரவுகளுக்காக தனி ஃபைல்களை ஜாதவ் பராமரித்துவந்தார். அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர ஜாதவ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.2 கோடி பணம் மற்றும் 1.5 கோடி மதிப்பு தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாதவ், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறையின் இந்தத் தகவல்கள் வரும் மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்று பாஜக கருதுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism