Published:Updated:

உத்தவ் தாக்கரே மைத்துனருக்கு எதிரான மோசடி வழக்கு: கைவிட்ட சிபிஐ; எதிர்க்கும் அமலாக்கப் பிரிவு!

சித்திரிப்புப் படம்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மைத்துனருக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ கைவிட்டிருக்கிறது.

உத்தவ் தாக்கரே மைத்துனருக்கு எதிரான மோசடி வழக்கு: கைவிட்ட சிபிஐ; எதிர்க்கும் அமலாக்கப் பிரிவு!

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மைத்துனருக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ கைவிட்டிருக்கிறது.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் ஸ்ரீதர் மகாதேவ் மீது ரூ. 84.6 கோடி மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. இதை சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு இணைந்து விசாரித்துவந்தன.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது புஸ்பக் புல்லியன் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ரூ.84.6 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டன. தங்கம் விற்றது மற்றும் வாங்குவதற்காக இந்தப் பணம் புஸ்பக் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பரிவர்த்தனையில் சந்தேகமடைந்த அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அது குறித்து விசாரணை நடத்தியது. இதையடுத்து புஸ்பக் நிறுவனம் அந்த வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.84.6 கோடியை ஸ்ரீதருக்குச் சொந்தமான ஸ்ரீசாய்பாபா கிரகநிர்மிதி என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு மாற்றியது. அவ்வாறு வந்த பணத்தில் ஸ்ரீதர் மகாதேவ் 11 வீடுகளை வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஸ்ரீதர் மகாதேவுக்குச் சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீடுகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ஸ்ரீதர் மகாதேவுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதாகக் கூறி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அதை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் ஸ்ரீதர் மகாதேவுக்கு எதிரான வழக்கு விசாரணையை முடித்துக்கொள்ளப்போவதாக சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்தது.

இதற்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடித்துக்கொள்ளும் சி.பி.ஐ-யின் முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் ஒரு விசாரணை அமைப்பு மற்றொரு அமைப்பிடம் ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரிக்கும்படி நிர்பந்தம் செய்யக் கூடாது என்று தெரிவித்த நீதிபதி செய்யத், `சி.பி.ஐ இரண்டு முறை இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரணை நடத்தியிருக்கிறது. நீதிமன்றம் எழுப்பிய அனைத்துச் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறது’ என்று கூறி விசாரணையை முடிக்கும் சி.பி.ஐ அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள், புஸ்பக் நிறுவனத்தின் சந்திரகாந்த் பட்டேல் ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!