Published:Updated:

திருவாரூர் கோயிலில் தரிசனம்... தேனீக்களால் ஆளுநரின் ரூட்டை மாற்றிய அதிகாரிகள்! - நடந்தது என்ன?

ஆளுநர் ஆர்.என்.ரவி

தி.மு.க அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதால், தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் இதன் கூட்டணிக் கட்சியினரும் தமிழக ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறார்கள்.

திருவாரூர் கோயிலில் தரிசனம்... தேனீக்களால் ஆளுநரின் ரூட்டை மாற்றிய அதிகாரிகள்! - நடந்தது என்ன?

தி.மு.க அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதால், தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் இதன் கூட்டணிக் கட்சியினரும் தமிழக ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறார்கள்.

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று திருவாருர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு, பின்னர், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் வருகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர காண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆளுநர்
ஆளுநர்

தி.மு.க அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதால், தி.மு.க.-வினர் மட்டுமல்லாமல் இதன் கூட்டணி கட்சியினரும் தமிழக ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் செல்லும் வழியில் ஆளுநர் கான்வாய் மீது, சிலர் கறுப்புக்கொடிகளை வீசினர். ஆளுநர் பாதுகாப்பில் குளறுபடி என இது சர்ச்சையும் ஆனது. இந்நிலையில்தான் மே 27-ம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் ஆளுநர் கலந்துகொள்வதாக நிகழ்ச்சி நிரல் வெளியானது. திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேற்று மதியம் மத்திய பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 5 மணியளவில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யவிருக்கிறார் எனத் தகவல் வெளியானது. இதனால் காவல்துறை உயரதிகாரிகள் இப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர்.

கோயிலின் கிழக்கு கோபுர பெரிய வாசல் வழியாக ஆளுநர் கோயிலுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. மாலை 5.38 மணியளவில் தியாகராஜ சுவாமி கோயிலின் கிழக்கு கோபுர பெரிய வாசலில் ஆளுநரைப் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்க, மேளதாளங்களுடன் கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கிய உயரதிகாரிகள் காத்திருந்தனர். ஆளுநர் கார் இங்கு வந்து நின்ற நேரத்தில், கிழக்கு கோபுரத்தில் இருந்த தேன்கூட்டை புறாக்கள் கலைத்துவிட, காவல்துறை அதிகாரிகள் சற்று பதற்றமடைந்தனர்.

ஆளுநர்
ஆளுநர்

இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, கிழக்கு கோபுர பெரிய வாசல் வழியாக கோயிலுக்குள் செல்லாமல், கல்கோபுர வாசல் வழியாக உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். பிரதோஷ நாள் என்பதால் சிறப்பு வழிப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள், கோயிலுக்கு வந்திருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவர்களுக்கு எந்தவிதத் தடையையும் காவல்துறையினர் ஏற்படுத்தவில்லை. மூலவர் சந்நிதானத்தில் வழிபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பிறகு இக்கோயில் உள்ள மற்ற சந்நிதிகளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுக் கிளம்பி சென்றார். ஆளுநரை நல்லவிதமாக அனுப்பிவைத்ததால், திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism