Published:Updated:

``வைகோ உடன் செல்ஃபி எடுக்க வேண்டுமா..?” - ம.தி.மு.க-வின் புதிய அறிவிப்பு

பிரேம் குமார் எஸ்.கே.

வைகோவைச் சந்திக்கும் கட்சிக்காரர்களும் மக்களும் அவருடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்க விரும்புவது உண்டு.

வைகோ
வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சமீபத்தில் மாநிலங்களவைக்கு எம்.பி ஆக தேர்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரத்தில் அவர் பேசியது எல்லாம் செம ஹிட். அரசின் பதவிகளில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து மக்களுடன் பயணிப்பவர். பல்வேறு போராட்ட களங்களுக்குச் செல்வார். வைகோவின் நடைபயணமும் அனைவரும் அறிந்ததே.

வைகோவுடன் செல்ஃபி
வைகோவுடன் செல்ஃபி

வைகோ இப்படிப் பயணமாகும்போது அவரைச் சந்திக்கும் கட்சிக்காரர்களும் மக்களும் அவருடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்க விரும்புவது உண்டு. இருக்கும் நேரத்தைப் பொறுத்து அனைவருக்கும் போஸ் கொடுப்பார் வைகோ.

ஆனால், இனி அப்படி இலவசமாக புகைப்படம் எடுக்க முடியாது என்கிறது ம.தி.மு.க வின் அறிவிப்பு. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ``கழகப் பொதுச்செயலாளர் வைகோவுக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம்.

``வைகோ உடன் செல்ஃபி எடுக்க வேண்டுமா..?” - ம.தி.மு.க-வின் புதிய அறிவிப்பு

வைகோவுடன் முகப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராகப் பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

`ஒரே உரையில் உலக ஃபேமஸ்..!’ - காஷ்மீர் தலைவர்களை க்ளீன் போல்டாக்கிய லடாக் எம்.பி பேசியது என்ன?

தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவும் பணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை!