Published:Updated:

2K kids: எங்க ஓட்டு யாருக்குனா..! - கேம்பஸ் ரிப்போர்ட்

எங்க ஓட்டு யாருக்குனா..!
பிரீமியம் ஸ்டோரி
News
எங்க ஓட்டு யாருக்குனா..!

வி.காயத்ரி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதே தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. வயலில் இறங்கி சர்ப்ரைஸ் கொடுப்பது முதல் மேடைகளில் முழங்குவதுவரை அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களிடம் ஸ்கோர் செய்துவருகிறார்கள். இந்த நிலையில், சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் சிலரிடம் அவர்களுக்குப் பிடித்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் காரணம் மற்றும் விமர்சனத்துடன் கேட்டோம்.

2K kids: எங்க ஓட்டு யாருக்குனா..! - கேம்பஸ் ரிப்போர்ட்

ஆல் பாஸ் ஆக்கினவர் எடப்பாடி பழனிசாமி

ஒரு விபத்து மாதிரி முதல்வர் ஆனவர்தான். ஆனாலும், அ.தி.மு.க உட்கட்சி பூசல், எதிர்க்கட்சினு எல்லாத்தையும் சமாளிச்சு தமிழகத்துக்கான பல நலத் திட்டங்களையும் செயல்படுத்திட்டு வர்றார். போன வருஷம், திருவாரூர்ல கார்ல போயிட்டு இருந்தப்போ திடீர்னு காரை நிறுத்தச் சொல்லிட்டு, வயல்ல இறங்கி விவசாயிகள்கிட்ட பேசினதோட, வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு நாற்று நட்டப்போ, ‘அட...’னு இருந்துச்சு. ‘கம்பராமாயணத்தை எழுதினது சேக்கிழார்’னு அப்பப்போ உளறி மீம் கன்டன்ட் கொடுத்தாலும், காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கு செமஸ்டரை எல்லாம் கேன்சல் பண்ணி ஆல் பாஸ் பண்ணினது... செம. ஆனாலும், இந்தியாவுல தமிழகம் இதுவரை தனிச்சு, துணிந்து நின்ன மாதிரி இப்போ இல்லைங்கிறதையும் நாங்க கவனிக்கிறோம்.

2K kids: எங்க ஓட்டு யாருக்குனா..! - கேம்பஸ் ரிப்போர்ட்

நீட் தேர்வை ரத்து செய்வாரா ஸ்டாலின்?!

ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து குரல் கொடுத்துட்டு வர்றார். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களோட கட்டணத்தை தி.மு.க ஏற்கும்னு அவர் சொன்னதுக்கு அப்புறம்தான், ‘அதை அரசே ஏற்கும்’னு மாநில அரசு சொன்னது. ஸ்டாலினோட அந்த ‘மூவ்’ பாராட்டுக்குரியது. சமீபத்துல விருத்தாசலத்துல, ஸ்டாலின் மேடையில பேசப் போகும் முன்பு அங்கிருந்து ஒரு சிறுமி அவர்கிட்ட பேசணும்னு சொல்ல, ஸ்டாலின் மேடை ஏறினதும் அந்தச் சிறுமியிடம் மைக் கொடுக்கச் சொல்லி பேசச் சொன்னார். இப்படி அவரோட பிரசாரங்கள்ல சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இருக்கிறது பிடிச்சிருக்கு. ஆனாலும், ‘ஸ்டாலினுக்குத்தான் ஓட்டு’னு இறுதி முடிவு எடுக்குற மாதிரி அவர் என்ன பண்ணப் போறார்னு பார்க்கணும்!

2K kids: எங்க ஓட்டு யாருக்குனா..! - கேம்பஸ் ரிப்போர்ட்

இல்லத்தரசிகளுக்கு ஊதியம்... கமலோட சிக்ஸர்!

நடிகர்கள் அரசியலுக்கு வந்தா ஓட்டுப் போடணுமாங்கிற கேள்விதான், கமல் மக்கள் நீதி மய்யம் ஆரம்பிச்சப்போ இருந்தது. ஆனா, அவரோட தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகள், அவரை ஏன் பரிசீலிக்கக் கூடாதுனு நினைக்க வெச்சிருக்கு. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்னு அவர் சொன்னது, ஒரு புதிய திட்டமா இருந்தது. அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு உட்பட, இன்னும் பல திட்டங்கள் அவங்க கட்சியோட தேர்தல் அறிக்கையில இருக்கு. அதோட சாத்தியம் என்னன்னு எல்லாம் தெரியல. ஆனாலும், ‘ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போமே’னு தோணுது. இன்னொரு பக்கம், ‘மய்யமா’ நிக்காம கொள்கை ரீதியா கமல் இன்னும் தெளிவா தன்னை வெளிப்படுத்த வேண்டியதும் முக்கியம்.

2K kids: எங்க ஓட்டு யாருக்குனா..! - கேம்பஸ் ரிப்போர்ட்

சீமான் பேச்சுக்கு விழுமா ஓட்டு?!

சீமானோட நகைச்சுவையான பேச்சு, அனல் பறக்கும் பேச்சுனு எல்லாமே எங்களுக்குப் பிடிக்கும். ‘தமிழ்க் கடவுள் முருகன்’னு சொல்லி அவர் வேலைக் கையில எடுத்தார். இப்போ வேல் தமிழ்நாட்டுல பெரிய அரசியல் ஆகிடுச்சு. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள்ல நாம் தமிழர் கட்சி, 50 சதவிகித இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குறது பாராட்டுக்குரிய முயற்சி. அந்த வகையில இந்த வருஷமும் 117 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவாங்கனு சொல்லியிருக்கார் சீமான். வரவேற்குறோம். அதேநேரம், ஆரம்பத்துல இளைஞர்கள்கிட்ட சீமானுக்கு இருந்த வரவேற்பு, இப்போ குறைஞ்சுட்டு வர்றதும் உண்மை. உட்கட்சி சலசலப்பு, விமர்சனங்கள்னு இதையெல்லாம் மீறி தன்னை நிரூபிக்கிறதுக்கான முனைப்பு இப்போ சீமான்கிட்ட குறைஞ்சிடுச்சுனு தோணுது.