Published:Updated:

ராஜமன்னார் சாலை அம்மா உணவகத்தை இடிக்கத் திட்டம்... மாற்று இடம் அறிவிக்காததால் ஊழியர்கள் ஷாக்!

இடிக்கப்படவிருக்கும் அம்மா உணவகம்

``மழைநீர் வடிகால் பணிக்காக இந்த உணவகம் இடிக்கப்படவிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை, மாற்று இடத்துக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.” - ஊழியர்கள்

ராஜமன்னார் சாலை அம்மா உணவகத்தை இடிக்கத் திட்டம்... மாற்று இடம் அறிவிக்காததால் ஊழியர்கள் ஷாக்!

``மழைநீர் வடிகால் பணிக்காக இந்த உணவகம் இடிக்கப்படவிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை, மாற்று இடத்துக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.” - ஊழியர்கள்

Published:Updated:
இடிக்கப்படவிருக்கும் அம்மா உணவகம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கவிருப்பதை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது 80 சதவிகிதம் பணிகள் மட்டுமே முடிந்திருப்பதால் இந்த ஆண்டும் சென்னையில் மழைநீர் தேங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார். இருந்தாலும், மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாநகராட்சி விரைவுபடுத்திவருகிறது. இந்த நிலையில், சென்னை கே.கே.நகர் சிவன் பூங்கா அருகே ராஜமன்னார் சாலையில் அம்மா உணவகம் ஒன்று பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

இந்த உணவகத்தில் நாள்தோறும் 4,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டுவருகிறது. சாலை ஓரத்தில் வசிப்பவர்கள், வயதானவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களுக்கும் இந்த உணவகம் பயன்பட்டுவருகிறது. தற்போது இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிக்காக இந்த அம்மா உணவகம் இடிக்கப்படவிருப்பதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழைநீர் வடிகால் அமைப்பதற்குக் குறுக்கே கட்டடங்கள், மரங்கள், மின்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை இருந்தால் அதைச் சுற்றி வடிகால் அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த அம்மா உணவகத்தின் முன்புறத்திலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்குப் போதுமான இட வசதி இருப்பதாகவும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மழைநீர் வடிகால் பணிக்காக என்று கூறியும் அம்மா உணவகத்தை மூடுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

இது குறித்து நம்மிடம் பேசிய ராஜமன்னார் சாலை அம்மா உணவகப் பணியாளர் மஞ்சுளா, "வியாபாரத்துக்கு முக்கியப் பங்காற்றக்கூடிய முக்கியமான பகுதியில் இந்த அம்மா உணவகம் அமைந்திருக்கிறது. தற்போது இது முன்னறிவிப்பின்றி மூடப்பட்டிருப்பதால் இந்தப் பகுதியில் உள்ள ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மழைநீர் வடிகால் பணிக்காக இந்த உணவகம் இடிக்கப்படவிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை, மாற்று இடத்துக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த உணவகத்தை மூடிவிட்டு எங்களை அருகே உள்ள உணவகத்தில் பணிமாற்றுவதாகச் செல்கிறார்கள். தற்போது எங்களுக்கு மாத ஊதியமாக 9 ஆயிரம் ரூபாய் கிடைத்துவருகிறது. வேறு இடத்துக்கு எங்களைப் பணிமாற்றம் செய்யும்போது மாத ஊதியம் குறைவாகவே கிடைக்கும். எனவே, எங்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது" என்றார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ராஜமன்னார் சாலை அம்மா உணவகத்தைத் தொடர்ந்து பல இடங்களில் அம்மா உணவகம் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக இடிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படி இடிக்கும்போது மாற்று இடங்களில் அம்மா உணவகத்தை அமைத்துவிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அம்மா உணவக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.