Published:Updated:

`பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணி உறுதி ஆனபோதே, நம் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது! - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், ``வரும் 100 நாள்கள் நாம் கடுமையாக உழைத்து, 200 தொகுதிகளை வென்று தமிழ்ப் புத்தாண்டில் தமிழன்னைக்குப் படைப்போம்" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். திருவரங்குளம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர், ``பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்டபோதே தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழக மக்கள் ஒருபோதும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

வரும் 100 நாள்கள் நாம் கடுமையாக உழைத்து, 200 தொகுதிகளை வென்று தமிழ்ப் புத்தாண்டில் தமிழன்னைக்குப் படைப்போம்" என்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசுகையில்,``ஓர் அரசியல் கட்சித் தலைவர் மக்களைச் சந்திப்பதில் என்ன சர்ச்சை இருக்கிறது... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்திக்கிறார். அதேபோல். மு.க.ஸ்டாலினும் மக்களைச் சந்திக்கிறார்.

இதில் சர்ச்சை இயற்கையாக உருவாகவில்லை. அ.தி.மு.க-வினர் செயற்கையாகவே சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 40 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்துக்குச் செவி சாய்க்காமலும், தனது பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளாமலும் செயல்பட்டுவருகிறது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

பண மதிப்பிழப்பு, சீன ஊடுருவல் தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரையிலும் மத்திய பா.ஜ.க அரசு பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளாமல் செயல்பட்டுவருகிறது. பிடிவாதத்துடன் முரட்டுத்தனமான இயந்திரம்போலவும் செயல்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்துவருகிறது. ரஜினி காந்த் என்னுடைய நீண்டநாள் நண்பர், அவருடைய முடிவை நான் வரவேற்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு