Published:Updated:

`மோடி, தன்னை விமர்சிக்கும் 5 பேருடன் விவாதிக்க வேண்டும்!’ - ப.சிதம்பரம் சொன்ன யோசனை #CAA

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதற்கு சாதகமான பதிலை பிரதமர் மோடி வழங்குவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலே கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. அஸ்ஸாமில் தொடங்கிய போராட்டம், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவத் தொடங்கியது.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்
பா. காளிமுத்து

மாணவர்கள், பல இடங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். எனினும் மத்திய அரசு தொடர்ச்சியாக, `இந்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்தானே தவிர, குடியுரிமையைப் பறிப்பதற்கான சட்டம் கிடையாது’ எனக் கூறிவந்தது. நாடு முழுவதும் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு நிலவி வந்த நிலையில், இந்தச் சட்டம் கடந்த 10 -ம் தேதி முதல் அமலானதாக அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ட்விட்டரில் சிஏஏ தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவர், ``பிரதமர் மோடி, சிஏஏ குடியுரிமை வழங்குவதற்குத்தான், குடியுரிமையைப் பறிப்பதற்கு அல்ல என்கிறார். எங்களில் பலபேர், சிஏஏ பல மக்களின் குடியுரிமையை எடுத்துவிடும் என எண்ணுகிறோம். மோடி உயர்வான இடங்களில் இருந்துகொண்டு அமைதியான, கேள்வி கேட்க முடியாத மக்களிடம் பேசுகிறார். நாங்கள் ஊடகத்தின் வழி பேசுகிறோம். ஊடக நண்பர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம்.

மோடி, அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பதில்லை. விமர்சிப்பவர்கள், அவருடன் பேசவதற்கான வாய்ப்பும் அமைவதில்லை. அதனால் இதற்கு ஒரே வழி, மோடி தன்னை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் 5 விமர்சகர்களை அழைத்து, அவர்களுடன் ஒரு கேள்வி - பதில் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். அது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். மக்கள் அதைக் கேட்டு, சிஏஏ தொடர்பான அவர்களின் முடிவை எடுக்கட்டும். இதற்குச் சாதகமான பதிலை பிரதமர் வழங்குவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு