Published:Updated:

பெரும்பான்மையை நிரூபித்த ஏக்நாத் ஷிண்டே - `அமலாக்கப் பிரிவு’ என கோஷமிட்ட எதிர்த் தரப்பினர்

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

பெரும்பான்மையை நிரூபித்த ஏக்நாத் ஷிண்டே - `அமலாக்கப் பிரிவு’ என கோஷமிட்ட எதிர்த் தரப்பினர்

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் கடந்த வாரம் சிவசேனா அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுக்கொண்டது. புதிய அரசு பதவி ஏற்ற பிறகு நேற்று புதிய சபாநாயகர் தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து சிவசேனா அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயை சட்டமன்ற சிவசேனா தலைவராகப் புதிய சபாநாயகர் ராகுல் நர்வேகர் அங்கீகரித்திருக்கிறார். இதனால் இன்று நடந்த பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் ஷிண்டே தரப்பு கொறடா பரத் கோகாவாலா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

உத்தவ் தாக்கரேயுடன் ஷிண்டே
உத்தவ் தாக்கரேயுடன் ஷிண்டே

அதோடு உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ-க்கள் 16 பேரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் ஷிண்டே அணி கொறடா பரத் கோகாவாலா நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். 16 பேரும் சபாநாயகர் தேர்தலில் ஷிண்டே ஆதரவு வேட்பாளரை எதிர்த்து வாக்களித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இன்று ஷிண்டே அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதற்காக காலையில் சட்டமன்றம் கூடியது. இதில் புதிய திருப்பமாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சந்தோஷ் இன்று ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்துவிட்டார். அவை கூடியதுமே அரசுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் எண்ணப்பட்டனர். இதில் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக 164 பேர் வாக்களித்தனர். அதேசமயம் அரசுக்கு எதிராக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் உட்பட சிலர் சட்டமன்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் வாக்களிக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக பிரதாப் சர்நாயக் வாக்களித்தபோது சிவசேனா உறுப்பினர்கள் `அமலாக்கப் பிரிவு, அமலாக்கப் பிரிவு...’ என்று கோஷமிட்டனர். அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ-க்களில் 19 பேர் சுயேச்சைகள். 39 பேர் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள். இந்நிலையில் 16 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் சஸ்பெண்ட் நோட்டீஸ் கொடுக்கவிருப்பதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவிருக்கிறது. புதிய அரசு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசுகையில், ``ஷிண்டே தலைமையிலான அரசு அடுத்த ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும்” என்று தெரிவித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் மேலும் கூறுகையில், ``ஆறு மாதங்களில் ஆட்சி கவிழ்ந்த பிறகு இடைத்தேர்தல் வரும். தற்போது ஷிண்டேவுக்கு ஆதரவு கொடுத்துவரும் பல எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரும். அதில் சில எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் சிவசேனாவுக்கே வருவார்கள். கட்சி எம்.எல்.ஏ-க்கள் அதிகமான நேரத்தைத் தங்களது தொகுதியில் செலவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சரத் பவார்
சரத் பவார்

``முதல்வர் பதவி கேட்கவில்லை”

இதற்கிடையே மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்துள்ள பேட்டியில், தான் முதல்வர் பதவியை கேட்கவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ``மகாவிகாஷ் அகாடி மீது எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருந்தனர். கட்சித் தொண்டர்களும் அதிருப்தியில் இருந்தனர். கூட்டணிக் குழப்பத்தால் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. பாஜக எனக்கு முதல்வர் பதவி கொடுத்தது அவர்களின் பெரிய மனதைக் காட்டுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வர பாஜக உதவியதாக அனைவரும் நினைக்கின்றனர். பாஜக-வுக்குத்தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்று மக்கள் நினைத்தனர். பாஜக-வுக்கு 115 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தும் எங்களுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை ஏற்க அவரிடம் பேசினேன். கட்சியின் உத்தரவை மதித்து நடக்கும்படியும் கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.