Published:Updated:

`கமலின் அரசியல் ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலும்!’ - மநீம-விலிருந்து சி.கே.குமரவேல் விலகியது ஏன்?

சி.கே.குமரவேல்

`மக்கள் நீதி மையத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியாக விலகுகிறேன். உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் வாழ்த்துகள்.’ - சி.கே.குமரவேல்

`கமலின் அரசியல் ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலும்!’ - மநீம-விலிருந்து சி.கே.குமரவேல் விலகியது ஏன்?

`மக்கள் நீதி மையத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியாக விலகுகிறேன். உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் வாழ்த்துகள்.’ - சி.கே.குமரவேல்

Published:Updated:
சி.கே.குமரவேல்

சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் தொடர்கதையாகிவருகின்றன. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு சில இடங்களில் கடும் போட்டி அளித்தாலும், பெரும்பாலான தொகுதிகளில் பெரிய அளவில் போட்டி அளிக்காமலேயே தோல்வியைத் தழுவியது. இந்தநிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறிவருகிறார்கள். மகேந்திரன், முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில் தற்போது அந்தக் கட்சியின் செயலாளராகப் பணியாற்றிவந்த சி.கே.குமரவேல் ராஜினாமா செய்திருக்கிறார்.

மகேந்திரன்- கமல்
மகேந்திரன்- கமல்

இது தொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம்.

2019 மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிப்போனாலும், தமிழகத்தில் உங்களாலும், மக்கள் நீதி மய்யத்தாலும் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் மீண்டும் இணைந்தேன். மக்களிடத்தில் அந்த மாற்றத்துக்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளாலும், உங்களுடைய சூறாவளிப் பயணத்தாலும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும் நம்பிக்கையும் அதிகரித்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் கிடைத்தபோதும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தபோதும் மக்கள் நீதி மய்யத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமாகின. ஆனால், இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமர வேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்தபோதும், ஒரு தொகுதியில்கூட நம்மால் வெற்றிபெற முடியவில்லையே ஏன்?

`கமலின் அரசியல் ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலும்!’ - மநீம-விலிருந்து சி.கே.குமரவேல் விலகியது ஏன்?

உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும், அவர்களுடைய தவறான வழிகாட்டுதலும்தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றிபெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும்தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டன.

நமது தோல்விக்கான காரணங்களையும் காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் ஊடகங்களின்முன் வைத்துவிட்டார்கள். அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரலாறு படைத்தவர்களாக இருக்க வேண்டிய நாம், வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமே என்கிற கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலைவிடவும், மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.

`கமலின் அரசியல் ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலும்!’ - மநீம-விலிருந்து சி.கே.குமரவேல் விலகியது ஏன்?

ஆகவே மக்கள் நீதி மையத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியாக விலகுகிறேன். உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism