Published:Updated:

`ஊரைக் காணவில்லை', `தி.மு.க பிரமுகரின் மண்டை உடைப்பு!' -திகைக்கவைத்த தேனி வாக்குச்சாவடிகள்

`தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டில் ஊரைக் காணவில்லை. எப்படி வாக்களிப்பது?” எனக் கேட்டனர்.

அம்மச்சியாபுரம் கிராம மக்கள்
அம்மச்சியாபுரம் கிராம மக்கள்

முதல்கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ஆண்டிபட்டி, கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

அம்மச்சியாபுரம் வாக்குச்சாவடி
அம்மச்சியாபுரம் வாக்குச்சாவடி

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக்கட்சியினரும், போட்டி போட்டுக்கொண்டு தங்கள் ஆதரவாளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டனர். இதில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறின.

தேனி அம்மச்சியாபுரம் அருகே உள்ளது வாய்க்கால்பட்டி கிராமம். இக்கிராம மக்கள், அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு வந்த கிராமத்தினர், ``தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டில் ஊரைக் காணவில்லை. எப்படி வாக்களிப்பது?” எனக் கேட்டனர். அதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து விசாரித்தபோது, வாய்க்கால்பட்டி என இருக்க வேண்டிய தெரியவந்தது.

இலவச டீ ... டூ விலர்களுக்கு இலவச சர்வீஸ்... உள்ளாட்சி வேட்பாளர்களின் தேர்தல் டெக்னிக்குகள்!

இதையடுத்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சமாதானம் செய்து வாக்களிக்க வைத்தனர். ``பக்கத்து ஊர் பெயரைப் போட்டு எங்க கிராமத்தைக் காணாமல் ஆக்கிவிட்டீர்களே'' எனப் புலம்பிக்கொண்டே வாக்களித்துவிட்டுச் சென்றனர் வாய்க்கால்பட்டி கிராமத்தினர்.

கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோம்பைத்தொழு கிராமத்தில் ஆளும் கட்சிப் பிரமுகரான செல்லத்துரை என்பவருக்கும், எதிர்க்கட்சி பிரமுகரான பெருமாள் என்பவருக்கும் இடையே, வாக்குச்சாவடி அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பெருமாளின் மண்டை உடைந்தது.

மண்டை உடைக்கப்பட்ட பெருமாள்
மண்டை உடைக்கப்பட்ட பெருமாள்

ரத்த வெள்ளத்தில் சரிந்த பெருமாளை மீட்டு, கானாவிலக்கு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர் அவரது கட்சியினர். இருவருக்குமிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்லதுரையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.