Published:Updated:

எடப்பாடி மகன் மிதுன் Vs பன்னீர் மகன் ரவீந்திரநாத்... வாரிசுகளின் ஈகோ யுத்தம்!

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்

இந்த விவகாரத்தில் மிதுன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ரவீந்திரநாத்துக்கு கெளரவப் பிரச்னையாகிவிட்டது. அதனால்தான், மனம் பொறுக்காமல் தேனிக்கு போன் போட்டு ஏற்கெனவே அடித்துவைத்திருந்த போஸ்டர்களை ஒட்டச் சொல்லிவிட்டார்.

'கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும்!' என்பார்கள். அ.தி.மு.க-வில் இப்போது அதுதான் நடக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு 'தர்மயுத்தம்' தொடங்கினார் ஓ.பி.எஸ். துணை முதல்வர் பதவியிலும் அமர்ந்தார். ஆனால், 'அந்தப் பதவிக்குரிய மரியாதை தரப்படவில்லை; தனது 'டிமாண்ட்'களும் ஏற்கப்படவில்லை' என்பதே பன்னீரின் மனப்புழுக்கம்.

இதன் வெளிப்பாடாகத்தான் இப்போது பார்ட்-2 யுத்தமாக 'மெளன யுத்த'த்தைத் தொடங்கியிருக்கிறார் பன்னீர். `அவரது முந்தைய தர்ம யுத்தம் சசிகலாவுக்கு எதிரானது எனில், இப்போதைய மெளன யுத்தம் எடப்பாடிக்கு எதிரானது' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

இந்த விவகாரத்தில், தலைவர்கள் இடையிலான ஈகோவைவிட அவர்களின் வாரிசுகளிடமுள்ள ஈகோவே பிரச்னை பெரிதாக வெடிக்கக் காரணம் என்கிறார்கள்.

இது பற்றிப் பேசியவர்கள், "எடப்பாடி தரப்பில் அவரின் மகன் மிதுன், ஐ.டி டீம், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் டீம் என தனித்தனியாக அலுவலகம் அமைத்து வியூகம் வகுக்கிறார்கள். இதேபோல், பன்னீர் தரப்பிலும் அவரின் மகன் ரவீந்திரநாத் குமார் தலைமையில் ஒரு டீம் களத்தில் இறங்கியுள்ளது. இந்த இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட உரசலே பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.

எடப்பாடி மகன் மிதுன் Vs பன்னீர் மகன் ரவீந்திரநாத்... வாரிசுகளின் ஈகோ யுத்தம்!

உண்மையில், பன்னீருக்குப் பெரிய ஆசையெல்லாம் எதுவும் இல்லை. `துணை முதல்வர் பதவியே போதும்' என்று நினைக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது துறை உட்பட பணி நியமனங்கள், பணியிட மாற்றங்கள், அரசு வீடுகள் ஒதுக்கீடு, சில டெண்டர்கள் என்று 300-க்கும் மேற்பட்ட ஃபைல்கள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முதல்வர் தரப்பில் அதைச் சீண்டக்கூட இல்லை. இதுதான் பன்னீரின் கோபத்துக்குக் காரணம். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தைப் பெரிதாக்கியதே ரவீந்திரநாத் குமார்தான்.

இந்த விவகாரத்தில் மிதுன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ரவீந்திரநாத்துக்கு கெளரவப் பிரச்னையாகிவிட்டது. அதனால்தான், மனம் பொறுக்காமல் தேனிக்கு போன் போட்டு ஏற்கெனவே அடித்துவைத்திருந்த போஸ்டர்களை ஒட்டச் சொல்லிவிட்டார்.

சுதந்திர தின விழாவுக்காகக் கோட்டைக்குக் கிளம்பிய முதல்வரிடம், தேனி போஸ்டர் விவகாரத்தை உளவுத்துறையினர் கூறியுள்ளனர். இதில் அவர் ஏகத்துக்கும் அப்செட் ஆகிவிட்டார். இந்த விஷயம் துணை முதல்வர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. பதறிப்போன அவர், உடனடியாக போஸ்டரைக் கிழிக்கும்படி கூறியுள்ளார்.

மிதுன் குமார்
மிதுன் குமார்

ஆனால், முதல்வர் விடுவதாக இல்லை... 'அவர் வீட்டு ஆளுங்க சொல்லித்தானே போஸ்டர் ஒட்டியிருக்காங்க... இது அவருக்குத் தெரியாதா?' என்று ஆவேசமானார். ஒருவழியாக முதல்வரைச் சமாதானப்படுத்தி மூத்த அமைச்சர்களின் ஆலோசனையுடன், 'தேவையற்ற கருத்துகளைப் பொதுவெளியில் பேசக் கூடாது' என்று ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதில் துணை முதல்வரிடமும் கையெழுத்து பெறப்பட்டது" என்றார்கள்.

- என்னதான் நடக்கிறது அ.தி.மு.க-வில்? / பன்னீர் பின்னால் யார்? / சசியிடம் சரணடையத் தயார்... / வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க... / அமைச்சர்கள்மீது அதிருப்தி... > ஜூனியர் விகடன் இதழில் முழுமையான சிறப்புக் கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2FGcr2J > மௌன யுத்தம்... பார்ட் 2 பன்னீர்! https://bit.ly/2FGcr2J

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV