Published:Updated:

``இனி எப்படி பேசுவாருனு பார்க்குறேன்..."- ஸ்டாலினை கமென்ட் அடித்த எடப்பாடி!

இனி ஸ்டாலினால் இது மக்கள் விரோத அரசு என எங்கேயும் பேச முடியாது. தங்களிடம் இருந்த தொகுதியைக்கூட தக்கவைத்துக்கொள்ளாமல், மக்களின் நம்பிக்கையை இழந்தது தி.மு.கதான்...

லட்டு வழங்கும் எடப்பாடி பழனிசாமி
லட்டு வழங்கும் எடப்பாடி பழனிசாமி

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் வெற்றிக் கனியைப் பறித்துவிட்ட குஷியில் இருக்கிறது அ.தி.மு.க. மிக முக்கியமான இவ்வெற்றி குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நாடாளுமன்றத் தேர்தல்ல பொய் சொல்லி தி.மு.க ஜெயிச்சாங்கல்ல, அதான் மக்கள் தண்டனை கொடுத்துட்டாங்க” எனக் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தேர்தல் முடிவுகள் வெளியாகி, அ.தி.மு.க முன்னிலை விவரங்கள் வெளிவந்தவுடன், ராயப்பேட்டை தலைமைக் கழகம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதுதான், ``தி.மு.க-வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள். இதன் வெளிப்பாடு தான் அக்கட்சி இடைத்தேர்தலில் அடைந்துள்ள படுதோல்வி” எனச் சீறினார்.

இடைத்தேர்தல் வெற்றி குறித்து அ.தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ``இந்த வெற்றி மூலமாக எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் உயர்ந்துள்ளதில் சந்தேகமில்லை. குறிப்பாக, அ.தி.மு.க அரசை அசைத்துப் பார்க்க வேண்டுமென்கிற சில டெல்லி தலைவர்களின் திட்டத்தில், இந்த இடைத்தேர்தல் வெற்றி மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. பி.ஜே.பி-யின் லாபகரமான கூட்டணிக் கட்சி நாங்கள்தான் என நிரூபித்துள்ளோம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மேடைக்கு மேடை `இது மக்கள் விரோத அரசு’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முழங்கி வந்தார். இடைத்தேர்தல் வெற்றி மூலமாக, அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. முதல்வர்கூட, `பொய்யா பேசிட்டு திரிஞ்சாருல. இனி எப்படி மேடையில பேசுவாருனு பார்க்குறேன். மக்கள் நம்மளை ஏத்துக்கலைனு இனி அவரால பேச முடியுமா?’ என எங்களிடம் கமென்ட் அடித்தார்.

முதல்வர் சொல்வதுபோல, இனி ஸ்டாலினால் இது மக்கள் விரோத அரசு என எங்கேயும் பேச முடியாது. தங்களிடம் இருந்த தொகுதியைக்கூட தக்கவைத்துக்கொள்ளாமல், மக்களின் நம்பிக்கையை இழந்தது தி.மு.கதான்” எனப் பொங்கினார்.

 ``இனி எப்படி பேசுவாருனு பார்க்குறேன்..."- ஸ்டாலினை கமென்ட் அடித்த எடப்பாடி!
 ``இனி எப்படி பேசுவாருனு பார்க்குறேன்..."- ஸ்டாலினை கமென்ட் அடித்த எடப்பாடி!
 ``இனி எப்படி பேசுவாருனு பார்க்குறேன்..."- ஸ்டாலினை கமென்ட் அடித்த எடப்பாடி!

இடைத்தேர்தல் வெற்றி, தார்மீக பலத்தை அ.தி.மு.க தொண்டர்களிடையே உருவாக்கியுள்ளது. தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றி பெரும்போதெல்லாம், தலைமைக் கழகத்தில் கொண்டாட்டத்துக்காக தொண்டர்கள் குவிவார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இக்கூட்டம் குறைந்திருந்தது. ஆனால், இன்றைய கொண்டாட்டத்தில், பழையபடி தொண்டர்கள் வெள்ளத்தைக் காண முடிந்தது. ஜெயலலிதாவின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து தொண்டர்கள் கொண்டாடினர்.