Published:Updated:

எடப்பாடி 'எக்ஸ்க்ளூசிவ்' பதில்கள்: ரஜினி - கமல் 'அட்டாக்', 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்?

எடப்பாடி
எடப்பாடி

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலாவது வருகிறவர், இரண்டாவது வருகிறவர் என்று ஓடவிட்டுத்தானே கண்டுபிடிக்கிறோம்.

''சார், முதலமைச்சர் போர்டுடன் போட்டோ எடுக்கவேண்டும்'' என்று புகைப்படக்காரர் கேட்க, "நன்றாக எடுங்கள்'' என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உதவியாளரை அழைத்து தன் டேபிளில் இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் என்கிற போர்டுக்கு இருபக்கமும் வைக்கச் சொல்லிவிட்டு, "இப்போது எடுங்கள். நான் முதலமைச்சரே இல்லை. அவர்கள் இருவரும்தான் உண்மையான முதலமைச்சர்கள். நான், பணியாள்'' என்று சொல்லியபடி நிமிர்ந்து உட்கார்ந்தார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2L0QUl2

கொடுத்த நேரத்தைத் தாண்டி கேள்விக் கணைகளை நாம் தொடுத்துக்கொண்டேயிருக்க, முதல்வரும் ஆச்சர்யம், பெருமை என உணர்வுக் கலவையாய் பதில்களைக் கொட்டிக்கொண்டே இருந்தார். இடையிடையே, "சார் நேரமாகி விட்டது... வெளியில் வேறு வி.ஐ.பி-க்கள் வெயிட்டிங்'' என்று உதவியாளர்கள் குறுக்கிட்டதெல்லாம் அவருடைய கவனத்தைப் பெறவே இல்லை.

"ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது குழந்தைகளுக்கு அதிக சுமை கொடுப்பதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறதே... உங்கள் கருத்து என்ன?

நீங்கள், நான் படித்த காலத்தில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு எல்லாவற்றிலுமே நன்றாகப் படிக்காதவர்களை ஃபெயில் செய்வார்கள். அப்போது இருந்த ஸ்டாண்டர்டு என்ன... இப்போது இருக்கும் ஸ்டாண்டர்டு என்ன? ஒரு குழந்தையின் கல்வித்தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? தரத்தை எப்படி ஒப்பீடு செய்வது? எட்டாம் வகுப்பு வரை அப்படியே சென்றுவிட்டு, திடீரென பொதுத்தேர்வுக்காகப் படி என்றால், எப்படிப் படிக்கும்?

எடப்பாடி 'எக்ஸ்க்ளூசிவ்' பதில்கள்: ரஜினி - கமல் 'அட்டாக்', 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்?

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலாவது வருகிறவர், இரண்டாவது வருகிறவர் என்று ஓடவிட்டுத்தானே கண்டுபிடிக்கிறோம். எட்டாம் வகுப்புக்கு வரும்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் தரத்தில் இருந்தால், மேற்கொண்டு எப்படி புத்திசாலி மாணவராக உருவாக முடியும்? நாமே அவர்களுக்கு துரோகம் இழைத்த மாதிரி ஆகிவிடும். பொதுத்தேர்வுகள் நடந்தால்தான் கல்வித்தரத்தை கண்டுபிடிக்க முடியும். அப்போதுதான் தேவைப்படும் கல்விக்கான பயிற்சியை ஆசிரியரால் தர முடியும். மக்களுக்கு குவாலிட்டியான கல்வி கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

ரஜினி திரும்பத் திரும்ப 'தமிழக அரசியலில் வெற்றிடம்' இருக்கிறது என்கிறார். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

"அவர் எதை வெற்றிடம் என்று சொல்கிறார் என்றே தெரியவில்லை. ரஜினி கட்சியைத் தொடங்கினால்தானே முழுமையான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளமுடியும். அரசியல் என்றால் நாட்டுநடப்பு தெரிந்திருக்க வேண்டும்; மக்களுடைய எண்ணங்கள் புரிந்திருக்க வேண்டும்; எல்லாவகையிலும் தாக்குப்பிடித்து மக்களுடைய தேவைகளுக்கு ஏற்ப சேவை புரியவேண்டும். அதற்காகத்தான் அரசியல் கட்சிகளே!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

சுயநலத்துக் காக அரசியல் கட்சிகளைத் தொடங்கினால் வெற்றி கிடைக்காது. இதையெல்லாம் திசைதிருப்பத்தான் 'வெற்றிடம்' என்று பேசிவருகிறார்கள்.''

"கமலிடமிருந்து அடிக்கடி உங்களை நோக்கி அம்புகள் பாய்கின்றனவே?''

"அவர் நடித்த ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை வந்தபோது, 'நாட்டை விட்டே வெளியேறுவேன்' என்றார். அப்படிச் சொன்னவர், தான் எப்படி அரசியலில் சாதிக்கப்போகிறோம் என்பதைப் பற்றி முதலில் யோசிக்கட்டும். பிறகு, அடுத்தவர்மீது அம்பு விடட்டும்.''

மிதுன், அரசியலில் பெரிதாக எந்தப் பதவியிலும் இல்லை. இளைஞர் பாசறை உருவாக்கியபோது, 'உங்கள் மகன்/மகள்கள் எல்லாம் பாசறையில் இருக்கவேண்டும்

"உங்கள் மகன் மிதுன் அரசியலுக்கு வருவாரா?"

"மிதுன், அரசியலில் பெரிதாக எந்தப் பதவியிலும் இல்லை. இளைஞர் பாசறை உருவாக்கியபோது, 'உங்கள் மகன்/மகள்கள் எல்லாம் பாசறையில் இருக்கவேண்டும். அப்போதுதான், மற்ற தொண்டர்களுக்கும் ஆர்வம் வரும். தங்கள் வாரிசுகளை அதில் சேர்ப்பார்கள்' என்று அம்மா சொன்னார். அதன்படி, எங்கள் கிராம இளைஞர் பாசறையில் துணைச் செயலாளராக இருக்கிறார். அவர் அரசியலில் ஈடுபடுகிறார், அதை வைத்து லாபம் பார்க்கிறார், இதற்காகவே வெளிநாடு செல்கிறார் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை.

"2021-ல் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார்?''

"இன்னும் அந்தக் கட்டத்துக்கு நாங்கள் போகவில்லை. இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. தொண்டர்களே ஆளுகிற கட்சி. அனைவரும் கூடித்தான் அதைப் பற்றி முடிவெடுப்போம்.''

- ஆனந்த விகடன் இதழுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த சிறப்புப் பேட்டியின் இரண்டாவது பகுதியை முழுமையாக வாசிக்க > "ஆரம்பத்தில் என்னைப் பற்றி தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்!" - எடப்பாடி பழனிசாமி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-cm-edappadi-k-palaniswami-second-part

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு