Published:Updated:

IPL இறுதிப் போட்டி : துபாய் கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் குடும்பம்!

துபாயில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண, அங்கு விமானத்தில் பறந்திருக்கிறது முதல்வர் குடும்பம்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. போட்டியின் இறுதி நாளான இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியைக் காண, முதல்வர் குடும்பத்தினர் துபாய்க்கு பறந்திருப்பதாகக் கூறுகிறது விவரமறிந்த வட்டாரம்.

`உதயநிதி Vs விஜய்' - தயாராகும் தேர்தல் களம்?
 சபரீசன், உதயநிதி
சபரீசன், உதயநிதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர் சிலர், ``ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிமீது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு அலாதி ஆர்வம் உண்டு. கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில், சென்னையில் முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால், குடும்பத்தினருடன் நேரில் கண்டுகளிக்கச் சென்றுவிடுவார். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கிரிக்கெட் ரசிகர்கள்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் டீ ஷர்ட்களை அணிந்து கொள்வது வரை முதல்வர் வீட்டின் குழந்தைகளும் கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளனர். தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் வீரர் தோனி மீது முதல்வருக்கு மிகுந்த மரியாதையும் உண்டு. இன்று (அக்டோபர் 15-ம் தேதி) துபாயில் நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப் போட்டியைக் காண முதல்வரின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார்கள். இவர்களுடன், அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் தன் குடும்பத்துடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார். கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் அவர்கள் தமிழகம் திரும்பவிருக்கிறார்கள்" என்றனர்.

அரசு அலுவல் காரணமாக, முதல்வரும் அவரின் துணைவியார் துர்காவும் துபாய்க்குச் செல்லவில்லையாம். மருமகன் சபரீசன் அழைத்தபோது, `வீட்டுல இருந்தே பார்த்துக்குறேன்' என்று முதல்வர் சொல்லிவிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு