Published:Updated:

``என்ன பழக்கம் இது?'' - கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

கோவை ஆட்சியர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
கோவை ஆட்சியர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அமர்ந்தபடியே மனு வாங்கியதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.கதான் வென்றுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மத்திய மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை ரத்து செய்யக்கூடாது, தொகுதிகளில் நடைபெறும் அரசு பணி தொடக்க நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க கொறாடா எஸ்.பி வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு கொடுக்க வந்தனர்.

ஆட்சியர் சமீரன் அமர்ந்தபடியே எம்.எல்.ஏ-க்களிடம் மனு வாங்கினார். இதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக, பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் சமீரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களும், “எம்.எல்.ஏ வந்தா.. எழுந்திருச்சு வாங்க மாட்டீங்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

ஆட்சியர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
ஆட்சியர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

அவர்களை அமைதியாக இருக்கும்படி வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் கூறினர். ஆனாலும் ஜெயராமன், செல்வராஜ் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“என்ன இப்படி பண்றீங்க..? இது ரொம்ப தவறு சார்..” என்ன பழக்கம் இது..? நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன். இந்தப் பழக்கம் எல்லாம் ரொம்ப தவறுங்க..” என்று ஜெயராமன் கூறினார். அதேபோல செல்வராஜ், “இது என்ன புது பழக்கம்?” என்று கேட்டு சமீரனை கோபமாக பார்த்துவிட்டு நகர்ந்தார்.

ஆட்சியர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
ஆட்சியர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

இதனால், ஆட்சியர் அறையில் சற்று பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு